Pages

Monday, September 18, 2017

மதிப்பெண் தில்லுமுல்லு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

தமிழக மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற, பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, பிளஸ் 2வை போல, பிளஸ் 1க்கும், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 38 ஆண்டுகளுக்கு பின், விதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண்ணுக்குப் பதில், 100 மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவற்றில், மொழி பாடங்களில், 90௦; செய்முறை தேர்வுள்ள பாடங்களில், செய்முறைக்கு, 20 மதிப்பெண் போக, 70 மதிப்பெண்களுக்கும் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது.

மொழி பாடம் மற்றும் செய்முறை பாடங்களுக்கு, தலா, 10 மதிப்பெண்ணும், தொழிற்கல்வி செய்முறை பாடங்களுக்கு, தலா, 25ம், அக மதிப்பீடு மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. இதை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். மாணவர்களின் வருகை பதிவு, உள்நிலை தேர்வு, ப்ராஜக்ட் ஒப்படைப்பு அல்லது, 'கேம்ப்' சென்று சேவையாற்றியது போன்றவற்றை பொறுத்து, இந்த மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண் வழங்குவதில் எந்த தில்லுமுல்லும் இல்லாமல், மாணவர்களுக்கு சரியான மதிப்பெண் வழங்க, கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். குருகுல கல்வி போல், தங்களுக்கு சேவை செய்யும், தங்கள் சொந்த பணி, பள்ளியின் பணிகளை பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு விதமாகவும், மற்ற மாணவர்களுக்கு ஒரு விதமாகவும் அக மதிப்பீடு வழங்கும் முறையை பின்பற்றக்கூடாது என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.