Pages

Saturday, June 10, 2017

தினமும் முட்டை சாப்பிட்டால் அதிகரிக்கும் குழந்தைகளின் வளர்ச்சி

நாளொன்றுக்கு ஒரு முட்டை சாப்பிடுவது குழந்தைகளின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலுக்குத் தேவையான புரதச்சத்து முட்டையில் அதிகமுண்டு. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லொரா இயனொட்டி இதைப்பற்றிக் கூறுகையில் “உலகம் முழுவதிலும் இருக்கும் வளர்ச்சி குறைபாட்டினை தீர்க்கும் சக்தி முட்டைக்கு உள்ளது, இளம் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் இருக்கிறது” என்றார்.


“குழந்தை பிறந்து 11 மாதத்திற்கு முன்பிலிருந்தே முட்டை சாப்பிடுவது  ஒவ்வாமை வராமல் தடுக்கும்” - ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள்

இந்த ஆராய்ச்சிக்காக 6-ல் இருந்து 9 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள் தோராயமாக தேர்வு செய்யப்பட்டு, 6 மாதங்கள் சில
குழந்தைகளுக்கு நாள்தோறும் ஒரு முட்டை வழங்கப்பட்டும், மீதமுள்ள குழந்தைகளுக்கு ஒரு முட்டைக்கூட வழங்காமலும் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் தினமும் முட்டைச் சாப்பிட்டு வந்த குழந்தைகளின் முதுகெலும்பு நீளம் மற்றும் எடையில்
நல்ல வளர்ச்சி தெரிந்ததாக ஆராய்ச்சிக் குழு தெரிவித்திருக்கிறது.

முட்டை சாப்பிட சில காரணங்கள்:

*முட்டை 9 அத்தியாவசிய அமினோ அமிலங்களைக்  கொண்டது.

*ஒரு முட்டையில் 6 குராம் தரமான உயர் புரதசத்துவுள்ளது.

*கண்புரை வளர்ச்சியைத் தடுக்கவல்லது.

*ஒரு முட்டை 5 கிராம் நல்ல கொழுப்பு சத்தை கொண்டிருக்கும்.

*இயற்கையாகவே விட்டமின் ‘டி’ உள்ள உணவுகளில் முட்டை ஒன்று.

*முடி மற்றும் நகத்தின் அரோக்கியத்தை காக்கும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.