Pages

Tuesday, September 19, 2017

புதிய வரைவு பாட திட்டம் நவம்பரில் வெளியீடு

'பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த, ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, கல்வியாளர்கள் அடங்கிய பாடத்திட்ட குழுவும், பள்ளி கல்வி அமைச்சர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள, பள்ளி கல்வி துறை செயலர், உதயசந்திரன் உள்ளிட்ட எவரையும் நீக்கக் கூடாது' என, கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், 'குழு உறுப்பினர்களில் மாற்றம் கூடாது' என, உத்தரவிட்டிருந்தார். இவ்வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயசந்திரன் நீக்கப்பட்டு, புதிய செயலர் நியமிக்கப்பட்டிருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதிகாரியை மாற்றியது குறித்து, நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர், 'அதிகாரி உதயசந்திரனை நீக்கவில்லை; முதன்மை செயலராக, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்' என்றார். புதிய பாடத்திட்ட பணிகள் நடப்பதாகவும், புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு, நவம்பரில், வெளியிடப்பட உள்ளதாகவும், அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.இதையடுத்து, 'உதயசந்திரன் நீக்கம் இல்லை' என்பதை, மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, அக்., 5க்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.