Pages

Saturday, June 3, 2017

வேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

கல்வி தரத்தை மேம்படுத்த `வேலூர் மாவட்டம்'' 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பதற்கு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மேலும் 3 ஆயிரம் தனியார் பள்ளிகள் மற்றும் 421 நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவுப்படி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.
மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் முதன்மை கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் அதிகளவு அரசு பள்ளிகள் உள்ளதால் பல ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் மாவட்டம் வேலூர் கல்வி மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டம் என பிரிக்கப்பட்டது.

தற்போது பிரிக்கப்பட்ட இரு கல்வி மாவட்டங்களிலும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகமாக உள்ளது. இதில் அரசு பள்ளிகளே அதிகமாக உள்ளதால் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிகளை முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. அதேபோல் அதிகளவு அரசு பள்ளிகளும், அதிகளவு மாணவர்களும் படிப்பதால் வேலூர் மாவட்டம் கல்வி தரவரிசைப்பட்டியலில் பின்தங்கியே உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் கல்வி அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தின் கல்வி தரத்தை மேம்படுத்த அதை 2 கல்வி மாவட்டங்களாக உள்ளதை 3 கல்வி மாவட்டங்களாக பிரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதாவது தற்போது வேலூர் கல்வி மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டம் என இரு கல்வி மாவட்டங்களாக உள்ளது. இதை இன்னொரு மாவட்டமாக ராணிப்பேட்டை கல்வி மாவட்டமாக பிரிப்பதற்கு பள்ளிக் கல்வி இயக்குனரிடம் முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை அனுப்பி உள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.