Pages

Saturday, June 10, 2017

தடுப்பூசி போடாவிட்டால், மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி

முறையாக தடுப்பூசி போடாத மாணவர்கள், பள்ளி களுக்கு செல்ல முடியாத வகையில், கிடுக்கிப்பிடி போட, பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும், தொடர்ந்து போட வேண்டிய தடுப்பூசிகள், ௨௦௦௭ முதல் முறையாக போடப்படாதது, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதனால், சமீபத்தில், ரூபெல்லா - தட்டம்மை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ௧௫ வயது வரை உள்ளவர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டது.


கால நீட்டிப்பு : இருப்பினும், ரூபெல்லா தடுப்பூசி குறித்த தவறான வதந்திகள் பரவி, மக்களிடையே அச்சம் நிலவியதால், குறித்த காலத்தில், ௧௦௦ சதவீத இலக்கை எட்ட முடியவில்லை. இதற்காக, கால நீட்டிப்பும் செய்யப்பட்டது. இந்நிலையில், முறையாக தடுப்பூசி போடாத மாணவர்களை, பள்ளிகளில் அனுமதிக்காத வகையில், பொது சுகாதாரத் துறை கிடுக்கிப்பிடி போடுகிறது.

இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரி கள் கூறியதாவது: 'சென்னை பொது சுகாதார சட்டம் - 1939'ன்படி, பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போட, பெற்றோரிடம் ஒப்புதல் பெற வேண்டியது இல்லை.

770 டாக்டர்கள் : இது குறித்து, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். இந்த ஆண்டு முதல், இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த உள்ளோம்.விடுபட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில், 770 டாக்டர்களும், நர்சுகளும் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக தடுப்பூசி போடாத மாணவர்கள், பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்படும். இந்த கிடுக்கிப்பிடியால், முறையாக தடுப்பூசி போடப்படும்; எதிர்கால சமுதாயம், ஆரோக்கியமானதாக மாறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.