Pages

Wednesday, August 30, 2017

’நீட்’விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்த விவகாரம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

’நீட்’ தேர்வு விண்ணப்பத்தில் அறியாமையால் செய்த தவறை சரிசெய்து, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் அனுமதிக்க தாக்கலான வழக்கில், மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு இயக்குனர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை வள்ளுவர் காலனி சுபிக் ஷா தாக்கல் செய்த மனு:

பிளஸ் 2 தேர்ச்சியடைந்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ’நீட்’ தேர்வு எழுதினேன். நான் இதர பிற்பட்டோர் பிரிவை (ஓ.பி.சி.,) சேர்ந்தவள். தேர்வு விண்ணப்பத்தில், அறியாமையால் ஓ.பி.சி.,க்கு பதிலாக யு.ஆர்.,எனப்படும் இட ஒதுக்கீடு அல்லாதவர்களுக்குரிய பிரிவை தேர்வு செய்துவிட்டேன்.

விண்ணப்பத்துடன் ஓ.பி.சி.,சான்று இணைத்திருந்தேன். உரிய ’கட்-ஆப்’ மதிப்பெண் பெற்று, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கு தகுதியடைந்தேன். ஆனால், தகுதிப் பட்டியலில் ஓ.பி.சி.,பிரிவில் எனது பெயர் இல்லை. ஓ.பி.சி.,பிரிவு கவுன்சிலிங் தகுதிப் பட்டியலில் எனது பெயரை சேர்க்க உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு சுபிக்ஷா மனு செய்திருந்தார்.நீதிபதி கே.கல்யாணசுந்தரம், “மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு இயக்குனர், மனுதாரரின் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.