Pages

Monday, September 4, 2017

வேளாண் படிப்பில் 703 இடங்கள் காலி

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியான நேற்று, 228 பேர் விரும்பிய இடம் தேர்வு செய்தனர்; மீதமுள்ள, 703 இடத்துக்கு, 1,500 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலையின்கீழ், 14 உறுப்பு மற்றும் 19 இணைப்பு கல்லுாரி உள்ளன. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை தொழில்நுட்பம் உட்பட, 13 பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.


இப்படிப்புகளில், 2,820 இடம் உள்ள நிலையில், 2017 - 18ம் ஆண்டுக்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன், 19 முதல், 24ம் தேதி வரை நடந்தது. நிறைவில், 2,156 இடம் பூர்த்தியாகின.

&'நீட்&' தேர்வு அடிப்படையில், மருத்துவப்படிப்புக்கு சேர்க்கை நடந்த நிலையில், காலியிட எண்ணிக்கை, 1,627 ஆக உயர்ந்தது. இதையடுத்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆக., 28 முதல், 30ம் தேதி வரை வேளாண் பல்கலையில் நடந்தது. அதில், 696 இடம் நிரம்பின; 931 இடம் காலியாகின.

ஆக., 31ம் தேதி, முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கியதால், இரண்டாம் கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியாக, நேற்றும், இன்றும் கலந்தாய்வு நடத்தப்படுவதாக பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று அழைக்கப்பட்ட, 1,498 பேரில், 245 பேர் பங்கேற்றனர்; 228 பேர், விரும்பிய பாடம் தேர்வு செய்தனர்; 17 பேர், எந்த பாடத்தையும் தேர்வு செய்யவில்லை.

வேளாண் பல்கலை டீன் மகிமை ராஜா கூறியதாவது:
மீதமுள்ள, 703 இடங்களுக்கு, 1,500 பேருக்கு இன்று பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அரசுக் கல்லுாரிகளில் பெரும்பாலான இடம் பூர்த்தியாகி விட்டன. இடம் தேர்வு செய்த மாணவர்கள் அந்தந்த கல்லுாரிகளுக்கு வரும், 5ம் தேதி சென்று சேரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.