Pages

Thursday, September 21, 2017

NIOS என்றால் என்ன?

**பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்

**தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.


**1989ல் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை நெகிழ்வான வழியில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தினை ஏற்படுத்தியது.

**[1]. NIOS ஒர் தேசியவாரியம் ஆகும், இது ஊரகப்பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. மேலும் உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தொழிற்கல்வி படிப்புகளை வழங்குகிறது.

**NIOS

**தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்*

**சுருக்கம் NIOS
**உருவாக்கம் 3 நவம்பர் 1989 (27 ஆண்டுகளுக்கு முன்னர்)
**வகை அரசு பள்ளிக் கல்வி வாரியம்
**தலைமையகம் நொய்டா, உத்திரப்பிரதேசம், இந்தியா
**அமைவிடம்
**A-24/25, இன்ஸ்டிட்யுசனல் பகுதி, செக்டார் - 62, நொய்டா மாவட்டம், கவுதம் புத்த நகர், உத்திரப்பிரதேசம் - 201 309

**ஆட்சி மொழி
**இந்தி &  ஆங்கிலம்

*தலைவர்
**ஜே, ஆலம்

*தாய் அமைப்பு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)
*வலைத்தளம் www.nios.ac.in

*இது இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப் பள்ளியாக திகழ்கிறது.

*தற்போது தமிழில் தேர்வு எழுதலாம்
*குறிப்பாக 3ம் வகுப்பு முதல் மருத்துவம் வரை இங்கே  பயிலலாம் பள்ளி இடை நின்றவர்கள்  10, 12 வகுப்புகளும் படிக்கலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.