Pages

Friday, June 2, 2017

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.

அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.