Pages

Thursday, September 21, 2017

ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் இன்று காலை விசாரணைக்கு வந்த போது தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார். பிற்பகலில் வழக்கு விசாரணையை தொடர்ந்த நீதிபதிகள், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்திற்கான சம்பளத்தையும் பிடித்தம் செய்யக் கூடாது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது. 

7 வது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்த எவ்வளவு காலம் ஆகும் என்பது பற்றி அக்டோபர் 13 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த கால தாமதமானால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கோரிக்கைகளை முன்நிறுத்தி போராட்டம் நடத்திய ஊழியர்கள் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.