Pages

Sunday, April 30, 2017

இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிகள் வெளியீடு

சென்னை, இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான விதிமுறைகள் இடம் பெற்ற, அதிகாரப்பூர்வ அறிக்கையை, அண்ணா பல்கலை இன்று வெளியிடுகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்குகிறது. 

ஜே.இ.இ., தேர்வு; விடைத்தாள் நகல் வழங்க முடிவு

ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வின் விடைத்தாள் நகல் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., -என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

உறைவிட பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் ஜரூர்

கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, அரசு உத்தரவிட்டாலும், உறைவிட பள்ளிகளில், நாள் முழுவதும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அண்ணாமலை பல்கலையிலிருந்து 2,000 பேர் கூண்டோடு மாற்றம்

பல கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படும், அண்ணாமலை பல்கலையில் இருந்து, பேராசிரியர்கள், ஊழியர்கள் உட்பட, 2,000 பேர், இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், நிர்வாக பிரச்னை ஏற்பட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

தேர்வு முறையில் மாற்றம் மத்திய அரசு அறிவுரை

'பொது தேர்வு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

38 தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு

பள்ளி கல்வித்துறையில், 38 தலைமை ஆசிரியர்களுக்கு, டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

38 மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு 'ஹால் டிக்கெட்'

சென்னை, தர்மபுரி, வேலுார் மாவட்டங்களில் இருந்து, 38 மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக, 'நீட்' எனப்படும், தேசிய நுழைவு தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். ஆன்லைனில் ஏற்பட்ட பிரச்னையால், கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

ஆகஸ்டில் மீண்டும் போராட்டம் அரசு ஊழியர்கள் அறிவிப்பு

''பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கையை, ஜூலைக்குள் நிறைவேற்றாவிடில் ஆகஸ்டில் போராட்டத்தை தவிர்க்க முடியாது,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் அன்பரசு தெரிவித்தார். 

அங்கீகாரமின்றி 2,500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மாணவர்களை ஏமாற்றி வசூல் வேட்டை

தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாமலேயே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்றதாக கூறி, ௨,௫௦௦ பள்ளிகள் செயல்படுவது தெரியவந்துள்ளது. மாணவர்களையும், பெற்றோரையும் ஏமாற்றி வசூல் வேட்டை நடத்தும் இந்த பள்ளிகளுக்கு, அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலை கணினி ஆசிரியர்களே நமது நிலையை மாற்றுவோம் வாரீர்

கணினி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு உண்ணாநிலை ....

நாள்:07/05/2017
நேரம்:9.00 -5.00
இடம்: சென்னை சேப்பாக்கம்  விருந்தினர் மாளிகை அருகில் .

கசாப்புக்கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை.. கணினி ஆசிரியர்களின் துயரச்சித்திரம் நீண்டுகொண்டே செல்கிறது.

தொடக்கக் கல்வித்துறையில் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டவர்கள், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற இடைக்கால தடை

2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் நேரடி பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உயர்நீதிமன்றம் 6 வாரகால இடைக்காலத் தடை விதித்துள்ளது

Friday, April 28, 2017

2017 - 18 கல்வி ஆண்டில் குறுவளமையபயிற்சி வகுப்பில் மாற்றம்

ஒவ்வொரு வருடமும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம்

பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சிகள் அனைத்தும் ஜுன் மாதம் முதல் வாரத்திலேயே 5 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்.

ஜே.இ.இ., மெயின் தேர்வு 'ரிசல்ட்' : மீண்டும் ராஜஸ்தான் ஆதிக்கம்

இன்ஜினியரிங் படிப்புக்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற மத்திய அரசின் உயர் தொழிற்நுட்ப நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பொது மாறுதல் கலந்தாய்வு- ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு...

** 2017-18 இல் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் புதிய விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து 05.05.17 மாலைக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

** மாறுதல் கோரும் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

** பட்டதாரி / இடைநிலை/உடற்கல்வி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பிக்க ஒரே படிவத்தில் தேவையான மாறுதல் இனங்களில் ✔ (டிக்) குறியீடு இட்டு விண்ணப்பித்தல் வேண்டும்.

சி.பி.எஸ்.இ., 'சிலபஸ்' வெளியீடு

நாடு முழுவதும், பள்ளிகளில் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த, 2005ல் வரைவு பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன்படி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில், தமிழகம் தவிர, மற்ற மாநிலங்களும், சி.பி.எஸ்.இ.,யும் ஆண்டுதோறும், பாடத்திட்டங்களில் புதிய அம்சங்களை சேர்த்து வருகின்றன. 

பிளஸ் 1 'ரிசல்ட்' வெளியீடு - 'டல்' மாணவர்கள் 'அவுட்'

அரசு, தனியார் பள்ளிகளில், ஒன்பது லட்சம் மாணவர்கள், பிளஸ் 1 படிக்கின்றனர். சென்னை உட்பட முக்கிய நகரங்களில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், 50 சதவீதத்திற்கு குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களின் பட்டியலை, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் தயாரித்துள்ளன. அவர்களுக்கு, டி.சி., எனப்படும், மாற்று சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், 'டல்' மாணவர்களை, பள்ளிகள் கட்டாயமாக வெளியேற்றுகின்றன.

ஆசிரியர் பணிக்கு மே, 10 வரை அவகாசம்

'அரசு பள்ளிகளில், 1,114 ஆசிரியர் காலியிடங்களுக்கு, மே, 10 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி : 'யங் இந்தியா' அமைப்பு ஏற்பாடு

மதுரை இந்திய தொழில் கூட்டமைப்பு மண்டல அலுவலகத்தில் 'யங் இந்தியா' அமைப்பு சார்பில், மாணவர்களுக்கான திறன் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைப்பின் மதுரை பிரிவு தலைவர் விஜயதர்ஷன் ஜீவகன் பேசியதாவது:

பதிவெண் பட்டியல்;டி.எஸ்.பி.எஸ்.சி., அறிவிப்பு!

தமிழ்நாடு சிறைத்துறை சார்நிலைப் பணியில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு  ஜூலை 24, 2016 அன்று நடைபெற்றது. இதில், 12611 பேர் எழுத்து தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில்,

கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்துவது எப்படி?

’இன்ஜி., மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை போல், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழும், மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தி, அதன் பட்டியலை இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரிக்கை எழுந்துள்ளது.

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள். ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்: 1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது. 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.

டி.என்.பி.எஸ்.சி., இளநிலை அறிவியல் அலுவலர், சுகாதார புள்ளியியலாளர் உட்பட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு

இளநிலை அறிவியல் அலுவலர், வட்டார புள்ளியியலாளர் உள்ளிட்ட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மே மாதம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' ஒத்திவைப்பு

அமைச்சர்கள் உறுதிமொழியை ஏற்று, ஜூலை மாதம் வரை போராட்டத்தை ஒத்தி வைப்பதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற ஸ்டிரைக்கை துவக்கினர்.

பிளஸ் 2 தேர்வில் 'கிரேஸ்' மார்க் கிடையாது : உடனே ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு

தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிய வழக்கில், 8 வாரத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர் கல்வித்துறை, சுகாதாரத் துறை, வனத்துறை, உள்ளிட்ட துறைகளில் பனியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

டெட்' தேர்வு கண்காணிப்பு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.           மூன்று ஆண்டுகளுக்கு பின், வரும், 29, 30ல், 'டெட்' தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுவதும், 1,861 மையங்களில், இந்த தேர்வு நடக்கிறது; 8.47 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்

1. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் - ஜான் ஹோல்ட்
2. டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி
3. பகல் கனவு - ஜிஜுபாய் பதேக்கா
4. வன்முறையில்லா வகுப்பறை - ஆயிஷா நடராசன்
5. இது யாருடைய வகுப்பறை ? ஆயிஷா நடராசன்
6. கல்வி ஓர் அரசியல் - வசந்தி தேவி
7. என்னை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க - ஷாஜகான் - வாசல் பதிப்பகம்
8. முதல் ஆசிரியர் - சிங்கிஸ் அய்மாத்தவ்

ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்

1. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் - ஜான் ஹோல்ட்
2. டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி
3. பகல் கனவு - ஜிஜுபாய் பதேக்கா
4. வன்முறையில்லா வகுப்பறை - ஆயிஷா நடராசன்
5. இது யாருடைய வகுப்பறை ? ஆயிஷா நடராசன்
6. கல்வி ஓர் அரசியல் - வசந்தி தேவி
7. என்னை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க - ஷாஜகான் - வாசல் பதிப்பகம்
8. முதல் ஆசிரியர் - சிங்கிஸ் அய்மாத்தவ்

Wednesday, April 26, 2017

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு - தமிழக அரசு உத்தரவு.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''01.01.2016 முதல் திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 01.01.2017 முதல் அகவிலைப்படியினை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில்,

Tuesday, April 25, 2017

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்

ஊதிய குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையில் 6 இயக்குனர்கள் இடமாற்றம்

1. *பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், ஆர்எம்எஸ்ஏ இயக்குனராக மாற்றம்*

2. *தொடக்க கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், பள்ளி கல்வித்துறை இயக்குனராக மாற்றம்*


3. *ஆர்.எம.எஸ்.ஏ இயக்குனர் அறிவொளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக மாற்றம்*

Friday, April 21, 2017

ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு


ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி உள்ளது.

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் நடைபெறும் கால அட்டவணை வெளியீடு.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதலுக்கு வரும் 24 முதல் மே 5 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மே

பல்கலைகளில் பணி நியமனங்களுக்கு தடை; ’துடிக்கும்’ துணைவேந்தர்கள்!

தமிழகத்தில் அரசு பல்கலைகள், கல்லுாரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிட நியமனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் துணைவேந்தர்கள், புதிதாக துணைவேந்தர் பதவிகளை கைப்பற்ற முயற்சிப்பவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 24 அரசு பல்கலைகள், அரசு மற்றும் உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் என 2500க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. 

ஆசிரியர் சங்க போராட்டம்; பின்னணியில் ஆளுங்கட்சி?

மத்திய அரசுக்கு எதிராக, ஆசிரியர் சங்கத்தினர், இன்று போராட்டம் நடத்துகின்றனர். ஆளுங்கட்சி பின்னணியில், இந்த போராட்டம் நடப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ படிப்புக்கான, ’நீட்’ நுழைவுத் தேர்வுக்கு எதிராக, ஆசிரியர் சங்கத்தினர், இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துகின்றனர். 

ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை


வெப்பக்காற்று வீசுவதால் ஏப்ரல் 21 முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

TET தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 

Sunday, April 16, 2017

தனியார் பள்ளியைப் போல் அட்மிஷனுக்காக அரசு தொடக்கப் பள்ளியில் மக்கள் குவிந்த அதிசயம்!

லட்சங்களைக் கொட்டி கொடுத்து, எல்.கே.ஜி அட்மிஷன் பெறுவதற்காக, தனியார் பள்ளிகளின் வாசலில் இரவே துண்டுப் போட்டு படுத்திருக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்போம். ஆனால், அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக, போட்டி போட்ட அதிசயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

அட்மிஷனுக்காக காத்திருக்கும் குழந்தைகள்

நூற்றுக்கணக்கான பிள்ளைகளுடன் அந்த அரசுப் பள்ளியில் பெற்றோர்கள் குவிய, ''மன்னிச்சுக்கங்க... 75 பிள்ளைகளுக்குத்தான் இடம் இருக்கு. மத்தவங்க கோவிச்சுக்காம வேற பள்ளியில் முயற்சி செய்து பாருங்க'' எனச் சொல்லிக்கொண்டிருந்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

பள்ளியில் இடம் கிடைக்காதவர்கள் வருத்தமான முகத்துடன் கிளம்ப, அட்மிஷன் முடிந்த 75 குழந்தைகளோடும் பல்சுவை நிகழ்ச்சிகளோடும் உற்சாகமான தொடக்க விழா நடந்தது. அந்தப் பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விழாவைத் தொடங்கி வைக்க, 75 மாணவர்களுக்கும் வண்ண வண்ண பலூன்கள், ஆளுக்கொரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களும் விழாவில் பங்கேற்றனர். கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்தான் இத்தனை அதிசயங்களும். 

கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் ஆறாவது பாடமாக நடைமுறைபடுத்த வேண்டி; கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம்

மாநில அளவிளான மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம்  ..

இடம்: சேப்பாக்கம் , சென்னை                                        நாள்:07/05/2017 காலை:9மணி

நமது  கோரிக்கை வெற்றி பெற ஆதரவு தாரீர்:

      அனைத்து ஆசிரியர் தாய் சங்கங்களும், கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்களும்  மற்றும் ஆசிரியர் சங்கங்களை சார்ந்த அனைத்து ஆசிரியப் பெருமக்களும் ,  தங்களின் மேலான ஆதரவை நல்கி வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்களான எங்களை கணினி பட்டதாரி ஆசிரியர்களாக துணை செய்வதோடு, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் கணினி கல்வி பெற மாபெரும் துணை புரிய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி ஏப்ரல் 19ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு!

கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் சங்கர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் அவர்களும், நிதிக்காப்பாளாராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் சாஸ்தா சுந்தரம் அவர்களும் தேரந்தெடுக்கப்பட்டனர்.

ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு; மாவட்ட வாரியான தெரிவு பட்டியல் அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளால் வெளியிடப்படுகிறது; 17.04.2017 முதல் பணி நியமன கலந்தாய்வு துவக்கம்.

ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு | ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியல் வெளியாகதுவங்கியது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. "ஒரு காலியிடத்துக்கு 5 பேர்" என்ற விகிதாச்சார அடிப்படையில் ஏறத்தாழ 22 ஆயிரம் பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Wednesday, April 12, 2017

நீட் தேர்வு; தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு படையெடுப்பு

நீட் தேர்வுக்கான பயிற்சி பெற, தமிழகத்தில் இருந்து, ஏராளமான மாணவ, மாணவியர், வெளிமாநிலங்களுக்கு படையெடுக்கின்றனர். இந்தியா முழுவதும் மருத்துவ கல்வி படிக்க, நீட் தேர்வு அவசியம் என, மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அப்போது, விதிவிலக்கு பெற்ற தமிழக அரசு, நடப்பாண்டும், நீட் தேர்வு வராது என, கூறியது. 

பல்கலை பேராசிரியர்களிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைப்பு

பாரதியார் பல்கலையில் ஆண்டுக்கணக்கில், பதிவாளர் உட்பட ஒன்பது முக்கிய பதவிகள் நிரப்பப்படாமல், பேராசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பாக திணிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோவை பாரதியார் பல்கலையில், பேராசிரியர் பணியிடங்களை நிரப்பியது தொடர்பான சர்ச்சை, இன்று வரை தொடர்ந்து வருகிறது. 

’நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு!

தமிழகத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, வரும், 19ல், மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக, தர்மபுரியில், கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்ட தலைவர் கவுரன் தலைமை வகித்தார். செயலாளர் பொன்.ரத்தினம் கூட்டத்தில் பேசியதாவது: 

10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆலோசனை

பள்ளிக் கல்வித்துறை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வை நிறைவு செய்த மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை கருத்தரங்கம், நகர்புற மாணவர்களுக்கு விருதுநகர், அருப்புகோட்டை, சாத்துார், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், கிராம மாணவர்களுக்கு காரியாப்பட்டி, நரிக்குடி, திருச்சுழி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு என 5 இடங்களில் நடைபெற்றது.

மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக போதிய இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

கேரளாவில் 10ம் வகுப்பு வரை மலையாளம் கட்டாய பாடம்

’கேரள மாநிலப் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, மலையாளம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்’ என, மாநில அரசு, அவசர சட்டம் இயற்றியுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. ’மாநிலத்தில், பல பள்ளிகளில் மலையாளம் கற்பிக்கப்படுவதில்லை; மலையாளத்தில் மாணவர்கள் பேசுவதற்கும், தடை விதிக்கப்படுகிறது’ என, அரசுக்கு அதிகளவில் புகார்கள் வந்தன.

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்!

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடங்களுக்கு இணையாக, தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 2006 முதல் அமலில் உள்ளது. 

ஆசிரியர் தகுதி தேர்வு; ஐகோர்ட் உத்தரவு

’தகுதி தேர்வு குறித்த அரசாணை வெளியாவதற்கு முன், இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களை, தகுதி தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்த முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

’டெட்’ தேர்வுக்கு இருவகை ’ஹால் டிக்கெட்’

ஆசிரியர் பணிக்கான, ’டெட்’ தகுதி தேர்வுக்கு, இரு வகையான, ’ஹால் டிக்கெட்’கள் வெளியிடப் பட்டுள்ளன. தமிழகத்தில், 2010ல், அமலான கட்டாய கல்விச் சட்டப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, ’டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். 

Tuesday, April 11, 2017

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சலுகை: உயர்நீதிமன்றம்

2011-ம் ஆண்டு நவம்பருக்கு முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.

மூலப்பொருட்கள் தட்டுப்பாடு; புத்தகங்கள் விலை உயர்வு

தொடர் வறட்சியால், காகிதம் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, தமிழகத்தில் புத்தகம், நோட்டுகளின் விலை உயர்ந்துள்ளது. விவசாயிகள் வளர்க்கும் சவுக்கு, மூங்கில் மரங்களை, ஒப்பந்த அடிப்படையில் காகித ஆலை நிறுவனங்கள் வெட்டி எடுத்து வந்து, மரக்கூழ் தயாரித்து, அதில் சில மூலப்பொருட்களைச் சேர்த்து காகிதம், நோட்டு, புத்தகங்களைத் தயாரிக்கின்றன. 

10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப்., 14க்குள் முடிக்க கெடு

தமிழகத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; ஏப்., 14க்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 31ல் முடிந்தது; 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். மொழி பாட விடைத்தாள்கள், மார்ச் 31 முதல் திருத்தப்படுகின்றன. 

ஆன்லைனில் எல்.கே.ஜி., இலவச சேர்க்கை; தில்லுமுல்லு தடுக்க அரசு அறிமுகம்

’தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., இலவச சேர்க்கைக்கான, விண்ணப்ப பதிவு, ஆன்லைனில் நடத்தப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், வருவாய் குறைந்த பிரிவு மாணவர்கள் சேர்க்கப்படுவர். 

இன்ஜி., கவுன்சிலிங் ஏப்., 18ல் பதிவு துவக்கம்!

அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான, ’ஆன்லைன்’ விண்ணப்ப பதிவை, ஏப்., 18ல் துவங்க, உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், தமிழக அரசின் இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி மூலம், மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதற்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில், ஆண்டுதோறும் நடத்தப்படும். 

ஊதியக்குழு கருத்து தெரிவிக்க 'கெடு'

எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து, வரும், 15க்குள் கருத்துகள் அனுப்பும்படி, ஆசிரியர் சங்கத்தினருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய, தமிழக அரசு, ஆய்வுக்குழுவை அமைத்துள்ளது. இதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர், அரசு அலுவலர்கள், ஊழியர்களிடம் கருத்துகளை கேட்டு, ஆய்வறிக்கை தயார் செய்கின்றனர்.

காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைபெறும் அரசுஊழியர்களிடம் பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள்: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற வரும் அரசு ஊழி யர்களிடம் மருத்துவமனைகள் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சிக்கு அவகாசம் நீட்டிப்பு - நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்.

ஆரம்ப பள்ளியில் பணியாற்றி வரும் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் 2019-ம் ஆண்டுக்குள் பயிற்சி பெறுவதற்காக கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

Sunday, April 9, 2017

7th Pay Commission: Central Government employees to get higher allowance with arrears from January 1, 2016, says report

Almost 10 months have been passed after the Narendra Government accepted recommendations made by the 7th Pay Commission but the decision on minimum wage and higher allowances have not reached the final conclusion. But for 47 lakh central government employees and 53 lakh pensioners it seems that the wait is finally over as the government has decided to pay their hiked allowances with arrears from January 1, 2016, The Sen Times reported.

Saturday, April 8, 2017

தமிழகத்தில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடல்?

தமிழகத்தில், 20க்கும் குறைவாக, மாணவர்கள் படிக்கும், 1,200 தொடக்கப்பள்ளிகள் மூட திட்ட மிடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், 36 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 19 ஆயிரம் பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கெடு

மதுரையில் தொடக்க பள்ளியில் கலெக்டர் வீரராகவராவ் நடத்திய ஆய்விற்கு பின் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தி நடவடிக்கை எடுக்க உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.ஓ.,க்கள்) ஒரு மாதம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இலவச எல்.கே.ஜி., அட்மிஷனில் சிக்கல்; தனியார் பள்ளிகள் திடீர் முட்டுக்கட்டை

’நிலுவைத்தொகை, 124 கோடி ரூபாயை தராவிட்டால், வரும் கல்வி ஆண்டில், இலவச மாணவர் சேர்க்கையை நடத்த மாட்டோம்’ என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான கட்டணம், பள்ளிக்கல்வித் துறை சார்பில், மானியமாக வழங்கப்படும். 

ஆசிரியர்கள் திடீர் போராட்டம் : பிளஸ் 2 விடை திருத்தம் பாதிப்பு

ஆசிரியர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி பாதித்தது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 31ல் முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., ௫ல் துவங்கியது. 9.33 லட்சம் பேரின் விடைத்தாள்கள் திருத்தப்பட வேண்டும். நேற்று மூன்றாம் நாளாக, இப்பணி துவங்கிய போது, ஆசிரியர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால், வேலுார், திருச்சி, மதுரை உட்பட, பல மாவட்டங்களில், விடைத்தாள் திருத்தும் பணி பாதித்தது.

'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெறுவது எங்கே? : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு

'நீட்' தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எங்கே பயிற்சி பெறுவது என தெரியாமல், அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒரே மதிப்பீட்டு முறை : வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை, நாடு முழுவதும் ஒரே மதிப்பீட்டு முறை அறிமுகமாகிறது. நாடு முழுவதும், 19 ஆயிரம் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் இயங்குகின்றன.

ஆய்வக உதவியாளர் பணி: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு.

ஆய்வக உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும், நாளை துவங்குகிறது. அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, 2015, மே, 30ல் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 

உதவி பேராசிரியர் பணி 20ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், தமிழ் வழிக்கான ஒதுக்கீட்டிற்கு, வரும், 20ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அரசு இன்ஜி., கல்லுாரிகளில், காலியாக உள்ள, 192 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 2016 அக்., 22ல், எழுத்துத் தேர்வை நடத்தியது. இதில், 28 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 

50 ஆண்டு அரசுப்பள்ளி : கவுரவிக்கிறது கல்வித்துறை

50 ஆண்டுகளாக இயங்கும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கவுரவிக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 

Friday, April 7, 2017

குடிமைப் பணி: நிகழாண்டில் 980 அதிகாரிகளை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம்

நிகழாண்டில் குடிமைப் பணித் தேர்வுகள் மூலம் 980 ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய குடிமைப் பணிகளுக்கு (யுபிஎஸ்சி) மூன்று நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

’நீட்’ எழுத பிளஸ் 1 பாடங்களை மீண்டும் படிக்கும் மாணவர்கள்!

’நீட்’ தேர்வு கட்டாயமானதால், தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மீண்டும், பிளஸ் 1 பாடங்களை படித்து, பயிற்சியை துவக்கி உள்ளனர். அகில இந்திய அளவில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, ’நீட்’ என்ற, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். 

கலந்தாய்வுக்கு காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்

பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வில், பகுதிநேர ஆசிரியர்கள், பணியிட மாறுதல் பெற, முன்னுரிமை அளிக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது. மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், கடந்த 2012ல், நாடு முழுவதும், பகுதிநேர கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழகத்தில், தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட, எட்டுப்பாட பிரிவுகளுக்கு, 16 ஆயிரத்து 549 பேர், பணியில் அமர்த்தப்பட்டனர். 

’புத்தக பூங்கொத்து’ புத்துயிர் பெறுமா? கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

புத்தக பூங்கொத்து திட்டத்தை, புத்துயிர் பெற செய்வதோடு, பள்ளிகளில் உள்ள நுாலகங்களுக்கு, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது. மாணவர்கள் மத்தியில், வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, கடந்த 2009-10 கல்வியாண்டில், தி.மு.க., ஆட்சியில், ’புத்தக பூங்கொத்து’ திட்டம் கொண்டு வரப்பட்டது. 

ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 3-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப் பங்களை பரிசீலனை செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன.

பென்ஷன் திட்ட ஆய்வு காலாவதியானது கமிட்டி

பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யும் கமிட்டியின், கால அவகாசம் முடிந்து, 11 நாட்களாகிறது. ஆயுட்காலத்தை அரசுநீட்டிக்காததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இரு ஆண்டுகளுக்கு முன், தொடர் போராட்டம் நடத்தினர். 2016, சட்டசபை தேர்தலுக்கு முன், பிப்.,19ல், பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

எஸ்.பி.ஐ.,அதிரடி - கணக்கு முடிக்க : ரூ.575 கட்டணம்


பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள கணக்கை முடித்துக் கொள்ள, 575 ரூபாய் அபராதம்வசூலிக்கப்படுவது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சிஅடைய வைத்து உள்ளது.  பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்களின், குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பை சமீபத்தில் உயர்த்தியது.இதன்படி, மாநகரங்களில், 5,000; நகரங்களில், 3,000; சிறிய நகரங்களில், 2,000, கிராமங்களில், 1,000 ரூபாய் என, இருப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஏப்ரல் 10 முதல் தொடங்குகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் தொடர்ந்து 30 வேலை நாட்களில் எவ்வித முன்னறிவிப்பின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாக கருத வேண்டும்.

விளையாட்டு போட்டிகளுக்கு 3 மாதம் கெடு: ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி!!

பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகளை, மூன்று மாதத்தில் முடிக்க, கல்வித்துறை கெடு விதித்துள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு, விளையாட்டு மேம்பாட்டிற்காக, ஆண்டுக்கு, 90 கோடி ரூபாய்க்கும் மேல், நிதி ஒதுக்குகிறது. பள்ளி மாணவர்களின் விளையாட்டுக்கு மட்டும், 20 கோடி கிடைக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு, ஜூன் துவங்கி, டிசம்பர் வரை, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

பள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் 3 ஆயிரத்து 40 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 2 ஆயிரத்து 839 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்தபள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த மாதம்(மார்ச்) 8-ந்தேதி தொடங்கி 29-ந்தேதிமுடிவடைந்தது.பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி31-ந்தேதி முடிந்தது.பிளஸ்-1 மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விட்டது. 6-வது முதல்9-வது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுவருகிறது.

1,861 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு : கண்காணிப்பாளர் நியமனம் தீவிரம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்புவரையில் பாடம் எடுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29ம் தேதியும், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30லும் தேர்வு நடத்தப்படுகிறது. 

ஆசிரியர் தகுதித்தேர்வில் பழைய ‘வெயிட்டேஜ்’ முறையே கணக்கிடப்படும்; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளவும், என்ன படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும் அரசு சார்பில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை கருத்தரங்கு முகாம்கள் நடத்த திட்டமிட்டது.

பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது துணைவேந்தர் பேட்டி

கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது என்றும், பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.

ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 3-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப் பங்களை பரிசீலனை செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்ப படிவங்கள் மார்ச் 23-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.

விடைத்தாள் திருத்தம்; ’சென்டம்’ வழங்க கடும் கட்டுப்பாடு!

பத்தாம் வகுப்பு விடை திருத்தத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆசிரியர்கள், குளறுபடியின்றி திருத்துவரா என, மாணவர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 30ல் முடிந்தது. 

’லேட்’ ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

சில நாட்களுக்கு முன், அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுடன், ’வீடியோ கான்பரன்சிங்’ மூலம் உரையாடிய, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:

சர்வதேச யோகா; குன்னூர் ஆசிரியை தேர்வு

குன்னுார் யோகா ஆசிரியை சுமதி, சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், சுமதி, 38; வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய உயர்நிலைப் பள்ளி யோகா ஆசிரியை. 

உ.பி., பள்ளிகளில் கட்டாயமாகிறது யோகா

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, அனைத்து பள்ளிகளிலும், யோகா பாடத்தை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்ய நாத் முதல்வராக உள்ளார். இவர், முதல்வராக பதவியேற்றது முதல், சட்டவிரோத மாட்டி றைச்சி கூடங்களுக்கு தடை, பெண்களை கிண்டல் செய்யும் இளைஞர்களை தண்டித்தல் உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

பள்ளியில் பெற்றோருக்கு உடை கட்டுப்பாடு!

மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோருக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங் விரைவில் அறிவிப்பு!

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, ’ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் சான்றிதழ்களை தயார் செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங், தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடக்கும். 

Sunday, April 2, 2017

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு!!

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில் 

வெளியிடப்பட்டது.

Saturday, April 1, 2017

தமிழக அரசு ஊழியர்கள் ஏப்.25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழக அரசு ஊழியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பரசு நாகையில் அறிவித்துள்ளார். தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் 10,61,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கரை ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4–ந்தேதி தான் கிடைக்கும்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்.

தமிழகத்தில் 43,051 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை நாளையும், இரண்டாம் தவணை 30–ந்தேதியும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

போலி பணி ஆணை : ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

திருவண்ணாமலையில், போலி பணி ஆணையால், ஆசிரியர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு உடந்தையாக இருந்த, ஒரு ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில், போலி பணி நியமன ஆணை கொடுத்து ஆசிரியராக பணிக்கு சேர்ந்தவர்கள் பற்றி விபரம் வெளியானது. இதையடுத்து, மூவர் தலைமறைவாகினர். 

"நீட்" தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5 வரை கூடுதல் அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

NEET தேர்வு எழுத வயது வரம்பு தளர்வு

இந்த ஆண்டு நடக்கும், 'நீட்' தேர்வை, 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் எழுதலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'பிளஸ் 2க்குப் பின், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை, 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சி.பி.எஸ்.இ., நிர்ணயித்த வயது வரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: நடப்பு, 2017ல் நடக்கும் நீட் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம். தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை, அடுத்த ஆண்டு முதல் நிர்ணயித்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஏப்., 5 வரை நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.