பள்ளிக் கல்வித்துறை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வை நிறைவு செய்த மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை கருத்தரங்கம், நகர்புற மாணவர்களுக்கு விருதுநகர், அருப்புகோட்டை, சாத்துார், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், கிராம மாணவர்களுக்கு காரியாப்பட்டி, நரிக்குடி, திருச்சுழி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு என 5 இடங்களில் நடைபெற்றது.
விருதுநகரில் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் கலெக்டர் சிவஞானம் துவக்கி வைத்தார். முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி வரவேற்றார். எஸ்.பி.,ராஜாராஜன் பேசினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சண்முகசிவமணி நன்றி கூறினார்.
ஒருங்கிணைப்பாளர்களாக தலைமையாசிரியர் கணேசன், முதுநிலை விரிவுரையாளர் வெள்ளத்துரை, விரிவுரையாளர் அழகப்பன், நேர்முக உதவியாளர் மகேந்திரன் செயல்பட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.