Pages

Tuesday, April 11, 2017

காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைபெறும் அரசுஊழியர்களிடம் பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள்: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற வரும் அரசு ஊழி யர்களிடம் மருத்துவமனைகள் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமங்கலத்தைச் சேர்ந்த சி.தாமோதரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் அரசு உதவி பெறும் கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்பநராக பணிபுரிந்து வருகிறேன். இருதய நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.இதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற சென்றபோது ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தில் சிகிச்சை பெற பணம் செலுத்த வேண்டியதில்லை எனக் கூறப் பட்டது. ஆனால், இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை களில் 50 சதவீத கட்டணம் வசூலிக் கின்றனர். இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளத்தில் அமலில் உள்ள மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தில் அரசுஊழியர்கள் முழு பயனடைந்து வருகின்றனர்.

அதேபோன்று, தமிழகத்திலும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என மருத் துவமனைகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டி ருந்தது.இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். தமிழக அரசு பதிலளிக்கஉத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.