Pages

Saturday, April 8, 2017

ஆய்வக உதவியாளர் பணி: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு.

ஆய்வக உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும், நாளை துவங்குகிறது. அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, 2015, மே, 30ல் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 

தேர்வு முடிவுகள், மார்ச், 24ல் வெளியாகின. இவர்களுக்கு, நாளை முதல், வரும், 11ம் தேதி வரை, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலம், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.எழுத்துத் தேர்வுக்கு, 150; வேலைவாய்ப்பு பதிவில், இரண்டு ஆண்டு வரை காத்திருப்போருக்கு, 2; நான்கு ஆண்டுகளுக்கு, 4; ஆறு ஆண்டுகளுக்கு, 6; எட்டு ஆண்டுகளுக்கு, 8; பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போருக்கு, 10 மதிப்பெண்கள் என, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் தரப்படுகிறது.பிளஸ் 2வுக்கு, இரண்டு; பட்டம் மற்றும் அதற்கு மேலான படிப்புகளுக்கு, மூன்று மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆய்வக உதவி யாளராக அனுபவம் இருந்தால், இரு மதிப்பெண்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

'பத்தாம் வகுப்பு முடித்த பலர், கல்லுாரி களுக்கு செல்ல முடியாமல், தொலை நிலை கல்வியில், டிப்ளமோ முடித்துள்ளனர். பட்ட படிப்புக்கு வழங்குவது போல, டிப்ளமோ படித்த தங்களுக்கும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்' என, அவர்கள் கோரிஉள்ளனர்.

போலி சான்றிதழ் கண்காணிப்பு : ஆய்வக உதவியாளர் பணி அனுபவத்துக்கு, இரண்டு மதிப்பெண் வழங்கப்படுவதால், பல பள்ளி, கல்லுாரிகளில் பணம் வாங்கிக்கொண்டு, போலி சான்றிதழ் வழங்குவதாக, புகார் எழுந்துள்ளது. எனவே, பணி அனுபவ சான்றிதழை, பள்ளி, கல்லுாரிகளின் ஆவணங்களில் சரிபார்க்க, அதிகாரிகள் முடிவு செய்துஉள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.