Pages

Friday, February 28, 2014

உண்மை நிலை....

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டம் நடத்தினாலே ஊதிய உயர்வுக்குத் தான் என்ற ஒரு தவறான மனநிலையை மக்கள் மனநிலையில் பதிய வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

உண்மையில் நடப்பது என்னவெனில் எங்களுடைய ஊதியத்தில் 10%தை பிடித்தம் செய்து தனியார் பங்குச்சந்தை எனும் சூதாட்டத்தில் முதலீடு செய்து லாபம் வந்தால் உங்களுக்கு நட்டம் வந்தாலும் உங்களுக்கே என்ற நிலையை மத்தியில் உள்ள ஆளுகிற கட்சியும் ஆளவேண்டும் என்கிற கட்சியும் சேர்ந்து செயல்படுத்தி வருகின்றன.

50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு பரிந்துரை

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகிதம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாக, பல்வேறு முக்கிய முடிவுகளை எடு்ப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள் சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்து வழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய இன்று வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெட் தேர்வில் ஓ.பி.சி., பிரிவினருக்கு புதிய மதிப்பெண் சலுகை!

நெட் தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான விதிமுறையை சற்று தளர்த்தும் செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவர்கள் இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் அனுமதி? - Dinakaran News

இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

டிட்டோஜாக் உயர்மட்டக் குழுக் கூட்டம் மார்ச் 3க்கு பதிலாக 4ந்தேதி கூடுகிறது

டிட்டோஜாக்கின் உயர்மட்டக்குழுக் கூட்டம் ஏற்கனவே மார்ச் 3ந்தேதி கூடுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் அக்கூட்டம் மார்ச் 4ந் தேதி கூடும் என  டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் முடிவாற்றி

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு, மாநில அரசின் அறிவிப்பு விரைவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று கூடிய மத்திய அமைச்சரவையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு க்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளி இல்லாததால் கூலி வேலைக்கு செல்லும் மாணவர்கள்

சென்னையை அடுத்த விச்சூர் ஊராட்சியில் மேல்நிலைப் பள்ளி அமைக்க, அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் எந்த பணியும் நடக்காததால் அந்த பகுதி மாணவர்கள், 10ம் வகுப்போடு தங்கள் படிப்பை நிறுத்திவிட்டு, செங்கல் சூளைகளில் வேலைக்கு செல்கின்றனர்.

இணைப்பு பள்ளிகளில் தனி பயற்சி வகுப்புகளுக்கு தடை - சி.பி.எஸ்.இ., அதிரடி

சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜே.இ.இ., போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவது மற்றும் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய படிப்புகளை நடத்துவது உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,300 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள்களை எடுத்துவர புதிய முறை

பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகள் தொலைவதைத் தடுக்க, தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறை வாகனங்களிலேயே விடைத்தாள்களைக் கொண்டுவர அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது. டி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150 மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்வு பணிச்சுமை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க வேண்டும்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளதால் உயர்நிலை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் அதிரடி கைது

நாமக்கல் அருகே, பள்ளி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை, போலீஸார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அடுத்த சப்பையாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் அருண்குமார், 27. அவர், கடந்த டிசம்பர் மாதம், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் மற்றும் மாணவியை அழைத்துக் கொண்டு, நாமக்கல் தனியார் கல்லூரியில் நடந்த கருத்தரங்குக்குச் சென்றார்.

லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த முடிவு

நீலகிரி லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

பள்ளியின் முதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது : தனியார் பள்ளிகளுக்கு, தேர்வு துறை, "செக்'

கடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின் முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக, பள்ளியின், உதவியாளர் (ஓ.ஏ.,) இருப்பார்.

முழு மதிப்பெண் அள்ளுவது எப்படி?

என்ன வியூகம் வகுத்து, பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டால், முழு மதிப்பெண் பெறலாம் என, தனது கடந்தாண்டு அனுபவங்களை 'டிப்ஸாக' தருகிறார், 2013ம் ஆண்டில், பிளஸ் 2வில், மதுரை மாவட்டத்தில் முதல் 'ரேங்க்' பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஜேஸ்வரி: பொதுவாக, அரசு தேர்வு என்ற டென்ஷனை முதலில் மூட்டை கட்டிவிட வேண்டும்.

Thursday, February 27, 2014

ஒன்றுப்பட்ட போராட்டம் ஒன்றே கோரிக்கை வெல்ல வாய்ப்பு, இல்லையெனில் பெற வாய்ப்பு இல்லை, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் பற்றிய உண்மைநிலை - SSTA பொதுச் செயலாளர் பிரத்யேக பேட்டி

ஏழாவது ஊதியக்குழு வரும் வரை, இடைநிலை ஆசிரியர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ, ஊதியத்தில் எந்தவிதமான வாய்ப்பும் கிடையவே, கிடையாது என்கின்றனர். இன்று சென்னையில், மரியாதைக்குரிய பள்ளிக்கல்வித் -துறை செயலாளர், முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நம்முடைய SSTA பொறுப்பாளர்கள் சந்தித்து, இடைநிலை ஆசிரியர்களின்

CEO OFFICE PHONE NUMBERS

1. CHENNAI 0442432735

2. COIMBATORE 04222391849

3.CUDDALORE 04142 286038

4.DHARMAPURI 04342 260085,261872

5. DINDIGUL 0451 2426947

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களைய கோரி SSTA அமைச்சரிடம் மனு

இன்று சென்னையில், மரியாதைக்குரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மற்றும் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை SSTA பொறுப்பாளர்கள் சந்தித்து, இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

ஓய்வு பெறும் வயது 62 ஆகிறது?: மத்திய அரசு நாளை அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை மேலும் 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

12 ஆயிரம் ஆசிரியர் "ஆப்சென்ட்": பாய்கிறது நடவடிக்கை

தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு 2 நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

ஸ்டிரைக் செய்யும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை, தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

யாருக்கு வாக்களிப்பது? குழப்பத்தில் இடைநிலை ஆசிரியர்கள் யாருக்கு வாக்களிப்பது?

பெரும் குழப்பத்தில் 75000 இடைநிலை ஆசிரியர்களும் அவரது குடும்பத்தார்களும் உள்ளனர்.கடந்த தி.மு .க.ஆட்சியில் ஆறாவது ஊதியக்குழுவில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சுட்டிக்காட்டி போராட்டங்களைச் செய்தார்கள் ஆனால் அவ்வரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை அதனால் வெறுப்பில் இருந்த இடைநிலை

TET EXAMS PAPER I AND II சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 .02.14 ல் வழக்குகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள TRB PG அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர்.சுப்பையா முன் 27.02.14 பிற்பகல் 2.15 விசாரணைக்கு வருகின்றன. 
Particulars of Writs 
GROUPING MATTERS 

1..WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
TET EXAMS PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-FOR REPORTING 

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்பணி துவங்கவுள்ளது.

தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் புதன்கிழமை (பிப்.26) ஒருநாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழக அரசின் புதிய சலுகையால் பாதிப்பு இல்லாதவர்களுக்கு (கட்-ஆப் 77க்கு மேல்) உடனடியாக பணி நியமனம் வழங்கப்படுமா?

2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் அண்மையில் தமிழக முதல்வர் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்து அரசு வேலை கிடைக்கும் என எண்ணி இருந்த ஆசிரியர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பின் மூலம் ஏமாற்றமடைந்தனர். ஆனால் CUT-OFF 77மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பால் எந்த பாதிப்பு இல்லை எனபது தான் உண்மை, இதனால் அவர்கள் கலக்கமடைய தேவையில்லை. ஏனெனில் புதிய அறிவிப்பின்படி ஆசிரியர்த் தகுதித் தேர்விற்கு 36 (82 முதல் 89வரை) மதிப்பெண்களும், மற்ற 10 அல்லது 12வகுப்பு மதிப்பெண் மற்றும் D.T.Ed / DEGREE / B.Ed ஆகிய தகுதிகளுக்கு அதிகபட்சமாக 40 மதிப்பெண்களும் வழங்கப்படும்,

மார்ச் 1ந் தேதியிலிருந்து அமல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த முடிவு

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மார்ச் 1ந் தேதியிலிருந்து இந்த உயர்வு அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 60ஆக உள்ள ஓய்வு பெறும் வயதில் 2 வருடங்கள் அதிகரிக்கும் இந்த முடிவு வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது...

மத்திய அரசு  ஊழியருக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உடனடியாக இது குறித்து அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி வரும் வெள்ளிக்கிழமை (27-02-14) அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் செயல்படுத்தப்படும்: அதிமுக தேர்தல் அறிக்கை

ஒரு திறமையான அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.

2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்க கோரி வழக்கு; 2வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்

2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உத்தரவிடக் கோரி திருவாரூரை சேர்ந்த மகேஸ்வரி மற்றும் எம்.ஆர்.சுகந்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு

தேர்தல் பணியில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு?

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், மக்களவைத் தேர்தல் பணியில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம்: ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு

திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் சேர்ந்து நேற்று 9 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை கல்வி துறை அதிகாரிகளிடம் இருந்து வந்த உத்தரவில், நாளை (அதாவது இன்று) ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: இவ்வார இறுதியில் நடைபெற வாய்ப்பு - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

இன்று (26.02.2014) காலை தொடக்க கல்வி இயக்குநர் முனைவர். இளங்கோவன் அவர்களை நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்தான தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொடக்க கல்வி இயக்குநர் அவர்கள் அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடமிருந்தும்,

திருச்சியில் ஆசிரியர்கள் ஸ்டிரைக்

திருச்சியில் இடைநிலை ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் எனவும், பழைய பென்ஷன் திட்டத்தையே

நாட்டின் பள்ளிகளை தரப்படுத்த தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி!

பள்ளிக் கல்வியை தரப்படுத்தும் பொருட்டு, மிகப்பெரிய அளவிலானதொரு பள்ளி தலைமைத்துவத்திற்கான பயிற்சியை, மத்திய மனிதவள அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்மூலம், நாடெங்கிலுமுள்ள 12 லட்சம் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தம் பாதிப்பு இருக்காது: தொடக்கக் கல்வி இயக்குநர்

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்  பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபடுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்  கூட்டணி பொதுச் செயலாளர் ரெங்கராஜன் கூறியதாவது:

திருச்சி துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

மாணவர்கள் முன்பு வினாத்தாள் கவர் பிரிக்க உத்தரவு: தேர்வுத்துறை கிடுக்கிப்பிடி

பிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, "கவர்" செய்யப்பட்டு உள்ளதால் தேர்வெழுதப்படும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க உத்தரவிட்டு உள்ளது. இதனால் முன்கூட்டியே வினாத்தாள், "அவுட்" ஆவதற்கு வாய்ப்பில்லை என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு இல்லை: பி.எட்., கணினி பட்டதாரிகள் தவிப்பு

அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை, கணினி பாடப் பிரிவு துவங்கப்படாததால், மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பி.எட்., கணினி பட்டதாரிகள்வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

கடைசி நேரத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பை, கடைசி நேரத்தில், தேர்வுத்துறை அறிவித்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பதிவு எண்களை, இணையதளத்தில் வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டதால், செய்முறை தேர்வு மதிப்பெண்ணை, பதிவு செய்வதற்கான படிவங்களை, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்ய முடியாமல்,

பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு

தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டில் 10, 11  மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி  மாணவர்கள் 7 லட்சத்து 23ஆயிரம் பேர் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை கேட்டு  விண்ணப்பித்துள்ளனர்.

Tuesday, February 25, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வு: மார்ச் 12ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற 47 ஆயிரம் பேருக்கு மார்ச் 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு: டி.இ.டி., தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை தரப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் தளர்வுக்குப் பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும், மார்ச் 12ம் தேதி முதல், மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,  

* நதிகளை தேசிய மயமாக்கி, நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

* சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தடுக்கப்படும் என்றும் அதிமுக உறுதியளித்துள்ளது.  

* மேலும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் சிறப்பு டி.இ.டி., தேர்வு எழுதலாம்

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுதலாம்" என தமிழக அரசு அறிவித்துள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும், இலவச டி.இ.டி., தேர்வு பயிற்சி அளிக்க, அரசு உத்தரவிட்டிருந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவதற்கான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை  அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது சார்பான அறிவிப்பு கடந்த வாரமே எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த வாரத்தில் கூடிய மத்திய அமைச்சரவையில் இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் மத்திய நிதியமைச்சர் தற்பொழுது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிற 26ம் தேதி இந்தியா வருகிறார்.

"டி.இ.டி" தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014ல் நடைபெற உள்ள பொது தேர்வுகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்

தமிழகத்தில் 2014ல் நடைபெற இருக்கும் அரசு பொது தேர்வுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அலுவலர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:ஒவ்வொரு ஆண்டும், பள்ளி கல்வித்துறை

10ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் வருமா? முடிவுக்கான கோப்பு, முதல்வர் மேஜையில் "கொர்"

பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், வழக்கமான பொது தேர்வு இருக்குமா அல்லது முப்பருவ கல்வி முறையின்படி, தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுமா என்பன குறித்து, கல்வித்துறையில், பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இது தொடர்பான கோப்பு, முதல்வரின் அலுவலகத்தில், ஆறு மாதங்களாக, கிடப்பில் உள்ளதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

"லாங் லீவ்" ஆசிரியர்கள்: தேர்வு நேரத்தில் மாணவர்கள் அவதி

தேர்வு நெருங்கும் சமயத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக வாரக் கணக்கில், "லாங் லீவ்" போடுவதால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தால் சிக்கல்

தமிழகத்தில் நாளை (பிப்.,26) ஒரே நாளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேர் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை, 4 ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்களை வைத்து சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

"கல்வித்துறை அதிகாரிகளுக்கு நடைமுறை சிக்கல் தெரியவில்லை"

கல்வித்துறை அதிகாரிகளுக்கு, நடைமுறை சிக்கல் தெரியவில்லை. 10ம் வகுப்பு, பொதுத் தேர்வுக்கான நேரத்தை, பழையபடி மாற்றாவிட்டால் தேர்ச்சி சதவீதம் கண்டிப்பாக குறையும்" என தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், சங்க பொதுச் செயலர், சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிரமம் ஆங்கிலம் படும்பாடு: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தவிப்பு

கோவை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில், பல ஆண்டுகளாக ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது. இதனால், பிற பாட ஆசிரியர்கள் ஆங்கில பாடத்தை கையாளும் அவலநிலையில் பள்ளிகள் செயல்பட்டுவருகிறது.

ஒரே பள்ளியில் 28 ஆண்டு பணி: ஆசிரியருக்கு தங்க பேனா, தங்க செயின், பைக், வழங்கி பாராட்டு விழா

ஒரே பள்ளியில், 28 ஆண்டு பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள், பைக், தங்க பேனா, தங்க செயின் வழங்கி கவுரவித்தனர்.

தமிழ்வழிப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இடது சாரி அமைப்புகள் உறுதுணையாக இருக்கும்: பாலபாரதி எம்எல்ஏ பேச்சு

தமிழ்வழிப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இடது சாரி அமைப்புகள் உறுதுணையாக இருக்கும் என்று பாலபாரதி எம்எல்ஏ பேசினார்.தமிழ்நாடு தமிழ்வழிப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்புஇணைந்து நடத்திய மாநில கோரிக்கைமாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் சனிக்கிழமை மாலை நடந்தது.

முதல்வர் ஜெயலலிதா, தனது பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டிலை கட்சியின் தலைமை அலுவலகத்தி்ல் இன்று வெளியிட்டார்.

1. திருவள்ளூர் - வேணுகோபால்
2. வட சென்னை - டி.ஜி. வெங்கடேஷ் பாபு
3. தென் சென்னை - ஜெயவர்த்தன்
4. மத்திய சென்னை - விஜயகுமார்
5. ஸ்ரீபெரும்புதூர் - ராமசந்திரன்
6. காஞ்சிபுரம் - குமாரவேல்
7. அரக்கோணம் - திருத்தணி கோ.அரி

ஆசிரியர்த் தகுதித் தேர்வு 2012ல் தேர்வு எழுதியவர்களுக்கும் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு

தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வணையம் மூலம் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது. அண்மையில் தமிழக முதலமைச்சர் 2013ல் தேர்வு எழுதியவர்களில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5% மதிப்பெண் தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து 2012ல் ஆசிரியர்த் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை

எம்ஜிஆரின் தத்துவ பாடல்கள் தெரியாத நீங்கள் எல்லாம் டீச்சரா? சென்னை மேயர் கேள்வியால் ஆசிரியர்கள் கொந்தளிப்பு.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பரிசளிக்கும் நிகழ்ச்சி ஷெனாய் நகரிலுள்ள மாநகராட்சி அரங்கத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. 

தமிழகத்தில் உயர்ந்துவரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் எண்ணிக்கை!

தமிழகத்தில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், சுமார் 80 புதிய பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அமைப்புடன் இணைந்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ., வாரிய பள்ளிகளின் நாடு முழுவதுமான மொத்த எண்ணிக்கை 14,841 ஆக உயர்ந்துள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு: "ஐகோர்ட்டின் இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும்" நீதிபதி அறிவிப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு ஐகோர்ட்டின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே உள்ள ராயனூரை சேர்ந்தவர் ஸ்ரீசாய்பிரியா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தொலைதூரத்தில் கிடைத்ததால் வேலையில் சேர பலர் தயக்கம்

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வு  ஆன்லைனில் நடந்தது. பலருக்கு தொலைதூர மாவட்டங்களில் பணி கிடைத்ததால் பதவி உயர்வை வேண்டாம் என பலர் எழுதிக்கொடுத்து சென்றனர். அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 600 இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வு நேற்று நடந்தது.

அரசுப் பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர்

குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நோட்டுப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் குஷால் சிங்குக்கு (வலது ஓரம்) விளக்குகிறார் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா. உடன் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர்.கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங் கூறினார். அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை

டெய்லர்களை அழைத்து விடைத்தாளை தைக்க வேண்டும் கல்வித்துறை புது உத்தரவு

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பிளஸ்2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.   பிராக்டிக்கல் தேர்வு அனைத்து பள்ளிகளிலும் கடந்த வாரத்துடன் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற போட்டி! ரூ.3 லட்சம் விலை கொடுக்க ஆசிரியர்கள் தயார்!

 மதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற ஆசிரியர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக 3 லட்சம் ரூபாய் வரை பேரம் நடப்பதாகவும், அதற்கு பலர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு: கார் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு 'ரூட் ஆபீசர்' பதவி

 பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக, கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள், "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்பட உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 3ம் தேதி துவங்குகிறது. இதற்காக, தேர்வு மையத்தில், புதிய பணியிடம் ஒன்றை, அரசு தேர்வு துறை தோற்றுவித்துள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி 10 நாட்களில் முடியும்

நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பல்வேறு மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது.

பிளஸ்–2, 10–ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வையொட்டி இரவு நேர மின்தடை வேண்டாம் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை

பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில், தொடக்கப் பள்ளிகளே இல்லை: ஆர்.நடராஜ்

தமிழகம் முழுவதும் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில், தொடக்கப் பள்ளிகளே இல்லை என ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஆர்.நடராஜ் தெரிவித்துள்ளார். சுவாமி விவேகானந் தர் கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில், ஓராசிரியர் பள்ளி திட்டத்தின் 7ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.

தனியார் பள்ளிகள் vs அரசு பள்ளிகள் அலசல்: நா.முத்துநிலவன்

 5முதல் 17வயது வரையான பள்ளிப்பருவம் மனித ஆளுமைகளை வளர்த்துக் கொள்வதற்கான ஆரம்பப் பருவம் அல்லவா? மதிப்பெண் எடுக்கும் பயிற்சியை மட்டுமே தருவதுதான் பள்ளிக்கூடத்தின் நோக்கமா? வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியில் மதிப்பெண் எடுப்பதும் ஒன்றே அன்றி மதிப்பெண் ஒன்றே எல்லாம் என்பதான கருத்தல்லவா மேலோங்கி நிற்கிறது,

பிளஸ் டூ தேர்வு: தேவையான தூக்கம்... நிறைய மதிப்பெண்கள்!

பிளஸ் டூ தேர்வு ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. இரவு, பகலாகக் கண் விழித்து மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். எப்படியாவது நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் படாத பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள். ""படித்தவை நன்கு மனதில் பதிய வேண்டுமானால், தேவையான அளவுக்கு நன்றாகத் தூங்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.

தமிழ் வழிப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க தடையாக இருக்கும் சட்டப்பிரிவை நீக்க வலியுறுத்தல்

தமிழ்வழி சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி வழங்கத் தடையாக இருக்கும் சட்டப்பிரிவு 14ஏ-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 5 முதல் விண்ணப்பம்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

Sunday, February 23, 2014

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை!

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும்சக்தியளிக்கும். பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / RestrictedHolidays) வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

மாற்றுத்திறன் குழந்தைகள் கல்விக்கு அரசு பள்ளிகளில் தனி ஆசிரியர்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க,சிறப்பு பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

பிப்.25 மற்றும் பிப்.26ல் நடைபெறும் போராட்டத்தில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு - தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் பிரத்யேக பேட்டி

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன், நமது "TNKALVI"க்கு அளித்த பிரத்யேக பேட்டியில்  வருகிற பிப்.25 மற்றும் பிப்.26ல் நடைபெற உள்ள போராட்டத்தில் மாநிலம் முழுவதும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 60ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். கோரிக்கைகள் சார்பாக பள்ளிக்கல்விச் செயலாளருடன் நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் இதையடுத்து திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.