கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,300 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சில சங்கங்களைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி 25-ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டமும், பிப்ரவரி 26-ம்தேதி ஒருநாள் விடுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு,அனைத்து மாவட்ட தொடக்கல்வி அலுவலர்களுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், சுமார் 1,300 ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். பட்டியல் பெறப்பட்டவுடன், சம்பளம் பிடித்தம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.