Pages

Friday, February 28, 2014

பள்ளியின் முதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது : தனியார் பள்ளிகளுக்கு, தேர்வு துறை, "செக்'

கடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின் முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக, பள்ளியின், உதவியாளர் (ஓ.ஏ.,) இருப்பார்.

தற்போது, பள்ளி முதல்வரில் இருந்து, ஓ.ஏ., வரை, எவருக்கும் அனுமதி கிடையாது. வேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவார். தேர்வு துவங்குவதற்கு முன், பள்ளி வளாகத்திற்குள், நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, நுழைய அனுமதி கிடையாது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை : "தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்குள், பள்ளி முதல்வர் முதல், ஓ.ஏ., வரை, ஒருவரும் நுழையக் கூடாது' என, தேர்வுத்துறை, கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. தேர்வில், சிறு அளவிற்கு கூட, முறைகேடு நடக்கக் கூடாது என்பதில், தேர்வுத்துறை, கவனமாக உள்ளது. இதற்காக, பல, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, துறை எடுத்து வருகிறது.
பிளஸ் 2 தேர்வு, 2,238 மையங்களிலும்; ??ம் வகுப்பு தேர்வு, 3,183 மையங்களிலும் நடக்கின்றன.
இவற்றில், பெரும்பாலான மையங்கள், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், பல முறைகேடுகள், தனியார் பள்ளிகளில் தான் நடந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலையில் உள்ள, மவுன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பெரும் அளவிற்கு முறைகேடு நடந்தது. இதேபோல், பல பள்ளிகளில் நடக்கிறது. ஆனால், ஒருசில மட்டுமே, அதிகாரிகளின் கவனத்திற்கு வருகிறது. பெரிய தனியார் பள்ளிகளில், நுழைவாயில், "கேட்'டுக்கும், "போர்டிகோ'விற்கும், 200 அடி மற்றும் அதற்கும் மேலும், நீளமாக இருக்கும். நுழைவாயில், "கேட்'டில், பள்ளியைச் சேர்ந்த, காவலர் தான், பணியில் இருப்பார்.

"செக்' : பறக்கும்படை குழு வந்தால், "கேட்'டை திறப்பதற்கே, பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்பார். அனுமதி கிடைத்து, தேர்வு அறைகளுக்கு, பறக்கும் படை குழு செல்வதற்குள், "உஷார்' நடவடிக்கைகள் முடிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற சம்பவங்கள், கடந்த காலங்களில் நடந்துள்ளன. தற்போது இயக்குனராக உள்ள, தேவராஜன், தேர்வுத் துறையில், நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
அதனால், தனியார் பள்ளிகளுக்கு, "செக்' வைக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து, இயக்குனரக வட்டாரம் கூறுகையில், "தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, "சீல்' வைத்து, அங்கிருந்து எடுத்துச் சென்ற பிறகே, பள்ளி அலுவலர்கள், பணியாளர்கள் அனுமதிக்கப்படுவர்' என, தெரிவித்தது. தேர்வுத்துறையின், இந்த அதிரடி நடவடிக்கையால், தனியார் பள்ளிகள், அதிர்ச்சி அடைந்துள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.