Pages

Wednesday, February 26, 2014

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தம் பாதிப்பு இருக்காது: தொடக்கக் கல்வி இயக்குநர்

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்  பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபடுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்  கூட்டணி பொதுச் செயலாளர் ரெங்கராஜன் கூறியதாவது:
மத்திய அரசுப்  பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழ்நாட்டு பள்ளி  ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தை  ரத்து செய்து, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த  வேண்டும். மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழுவில் அளித்துள்ள  போக்குவரத்துப்படி, வீட்டு வாடகைப்படி, கற்பித்தல் படி ஆகியவற்றையும்  வழங்க வேண்டும். தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டம் நடத்தும்  அளவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

இதன்படி நேற்று கோரிக்கை அட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டோம். ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு  பணி செய்யவில்லை. அதைத் தொடர்ந்து இன்று, ஒரு நாள் அடையாள  வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகிறோம். இன்று அனைத்து தொடக்கப்  பள்ளி ஆசிரியர்களும் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு வகுப்புகளை  புறக்கணிப்போம். இவ்வாறு ரெங்கராஜன் தெரிவித்தார். இது குறித்து  தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் கூறுகையில், இந்த வேலை  நிறுத்தம் அறிவித்துள்ளது ஒரு சங்கத்தை சேர்ந்தவர்கள் தான். அதனால்  பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றார்.

1 comment:

  1. paathippu ippo theriyathu sir. therthal(election) mudivula thaan theriyum. appo varuththappattu pirayojanam illai. viraivil nalla mudivu edunga sir.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.