Pages

போலி சான்றிதழ்: போலீஸ் விசாரணை தீவிரம்!

வெளி மாநில மாணவர்கள், போலி இருப்பிட சான்றிதழ்கள் சமர்ப்பித்து, எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றனரா என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தர வரிசை பட்டியல் படி,மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைதீவிரப்படுத்தி உள்ளனர்.

’நீட்’விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்த விவகாரம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

’நீட்’ தேர்வு விண்ணப்பத்தில் அறியாமையால் செய்த தவறை சரிசெய்து, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் அனுமதிக்க தாக்கலான வழக்கில், மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு இயக்குனர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை வள்ளுவர் காலனி சுபிக் ஷா தாக்கல் செய்த மனு:

நவோதயா பள்ளி விவகாரம்; தமிழக அரசின் நிலை என்ன?

நவோதயா வித்யாலயா பள்ளிகள் துவக்குவது தொடர்பான வழக்கில், தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குமரி மகாசபா செயலர் ஜெயகுமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனு: கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன. 

மருத்துவ மாணவர்கள் தவிப்பு

”நீட் தேர்ச்சி அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தும் மருத்துவ கல்லுாரிகளில் சேர முடியாமல் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தவிக்கின்றனர். தமிழக அரசின் மெத்தனத்தால் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு தள்ளி போனது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லுாரி மற்றும்பல்கலைகளில் படித்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் ”நீட் தேர்வு தேர்ச்சி அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்” என உத்தரவிட்டதை தொடர்ந்து, அவசரமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

செயல்படாத பள்ளிகள்; ’நிடி ஆயோக்’ அதிரடி

உரிய முறையில் இயங்காத அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்க, ’நிடி ஆயோக்’ பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசுக்கு, திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை அளித்து வரும் அமைப்பான, ’நிடி ஆயோக்’ மூன்றாண்டு செயல் திட்ட அறிக்கையை, சமீபத்தில் வெளியிட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: 

போலி சான்றிதழ்: போலீஸ் விசாரணை தீவிரம்!

வெளி மாநில மாணவர்கள், போலி இருப்பிட சான்றிதழ்கள் சமர்ப்பித்து, எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றனரா என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தர வரிசை பட்டியல் படி,மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைதீவிரப்படுத்தி உள்ளனர்.

பி.இ., பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்புகள் துவக்கம்

தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, செப்., ௧ல் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட்டது. 

அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்; நிதி ஆயோக்!

முறையாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் இன்று பரிந்துரை செய்துள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசுக்கு நிதி ஆயோக் இந்த பரிந்துரையை செய்திருக்கிறது மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் என்று பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

குரூப் - 4' பதவி: செப்.,4ல் கவுன்சிலிங்

'குரூப் - 4 தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல், கவுன்சிலிங் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு துறைகளில், குரூப் - 4-ல் அடங்கிய, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, 2016 நவ., 6ல், எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, பிப்., 21ல் வெளியானது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, செப்., 4 - 6 வரை, கவுன்சிலிங் நடத்தப்படும்.

மருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு!

தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தும் அவகாசத்தை செப்., 7 வரை நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்காக, நீட் நுழைவுத் தேர்வுநடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதில், தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், ஆக., 31 வரை வழங்கப்பட்டிருந்தது.

துணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்!

பிளஸ் ௨ துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இன்று, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிளஸ் ௨ சிறப்பு துணைத் தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது.

டிஜிட்டல்' பண பரிவர்த்தனைக்கு மாறுங்க! : கல்லூரி, பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், கல்வி கட்டணம் உட்பட, அனைத்து பணப் பரிவர்த்தனைகளிலும், 'டிஜிட்டல்' முறையை பின்பற்ற வேண்டும்' என, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மனிதவள அமைச்சக கட்டுப்பாட்டில் செயல்படும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

எளிமையாகிறது ’எமிஸ்’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்

கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது.

மாணவர்களுக்கு ’நீட்’ தேர்வு பயிற்சி துவக்கம்

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் ’நீட்’ தேர்வுக்கான பயிற்சியை மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் துவக்கி வைத்தார். ஈ.வெ.ரா., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சியை துவக்கி வைத்தும், பயிற்சிக்கான கையேட்டினை வழங்கியும் அவர் பேசியதாவது:

பள்ளிகளில் தமிழ், ஆங்கில நாளிதழ்; அனுமதி அளித்தது மத்திய அரசு

பள்ளிகளில் தமிழ், ஆங்கில நாளிதழ், தலா ஒன்று வாங்க மத்திய அரசு அனுமதித்து, நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டுத்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி மானியம், பராமரிப்பு மானியங்களை ஒதுக்கீடு செய்து நிதி வழங்குகிறது. 

மாணவர் கற்றல் விளைவுகளை அறிய ஆசிரியருக்கு பயிற்சி

மாணவர்களின் கற்றல் விளைவுகளை, ஆசிரியர்கள் அறிந்து கொள்ள, மாநில அளவிலான பயிற்சி முகாம், ஈரோட்டில் நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாநில அளவில் கற்றல் விளைவுகள் தொடர்பாக உயர் தொடக்க நிலை ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், ஈரோடு, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி

மதுரையில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் சார்பில் இடைநிலை அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி லேடி டோக் கல்லுாரியில் துவங்கியது.

தொழில்நுட்ப தேர்வில் விதிமீறலா?; அரசு தேர்வு துறை விளக்கம்

’தொழில்நுட்ப தேர்வில், எந்த விதிமீறலும் நடக்கவில்லை’ என, அரசு தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பு பாட ஆசிரியர்களாக பணியாற்ற, அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

பி.டி.எஸ்., படிப்பில் 50 சதவீதம் நிரம்பியது

அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின. தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,534 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 592 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. 

வேலை நிறுத்தம் நடக்குமா? அரசு ஊழியர்கள் இன்று முடிவு.

அடுத்த வாரம் துவங்க உள்ள, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆலோசனை நடத்துகின்றனர். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ௭௩ சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த அமைப்பு, செப்., ௭ முதல், தொடர் வேலைநிறுத்தம் செய்ய முடிவுஎடுத்திருந்தது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில், போராட்டம் நடத்தினால், அரசு தரப்பில் யாரும் பேச்சு நடத்த முன்வர மாட்டார்கள் என, தெரிகிறது. அதனால், போராட்டத்தை நடத்தலாமா அல்லது தள்ளிவைக்கலாமா என்ற குழப்பம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது.

நிதியுதவிப் பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்.

நிதியுதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தற்காலிகமாக, அரசு பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்,மாணவர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருகிறது.அனைத்து மாணவர்களுக்கும், ஆதார் எண் மற்றும் எமிஸ் எண் வழங்கப்பட்டதால், போலியாகவும் மாணவர் எண்ணிக்கையை கூட்டமுடிவதில்லை.இதனால், அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடும் போது, உபரி ஆசிரியர்கள் பணியிடம், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனால்,ஒவ்வொரு ஆண்டும் பணி நிரவல் என்ற பெயரில், வேறுபள்ளிக்கு, உபரி ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்படுகின்றனர்.

ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந்தப் பணத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் செலவிடும் தலைமை ஆசிரியர்

ஒன்று முதல் ஐந்து வரை ஆங்கில வழி வகுப்புகள்; ஆங்கில உரையாடலுக்கு தனிப் பயிற்சி; இந்தி மொழி வகுப்புகள்; இசைப் பயிற்சி; நடன வகுப்புகள்; ஓவியம், யோகா, கராத்தே கற்றுக் கொடுக்க தனித்தனி ஆசிரியர்கள்; இத்தகைய பன்முகத் திறன்களை மாணவர்களிடம் வளர்க்க மாதந்தோறும் சொந்தப் பணத்தில் ரூ.20 ஆயிரம் செலவு செய்யும் தலைமை ஆசிரியர்.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு; ஆகஸ்ட் 31 கெடு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடு தேதி இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது. நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.

ஆசிரியர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப பயிற்சி!

வகுப்பறையில் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களை முதன்மையானவர்களாக மாற்றுவதற்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 37,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளன.

அச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள்: கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

இடமாற்றம் வருமோ என அச்சப்படாமல், துணிந்து, அரசின் உத்தரவுகளை பின்பற்றி பணியாற்றுங்கள்' என, பள்ளிக் கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், செயலராக இருந்த சபிதாவையும், பின், இயக்குனர்களையும் மாற்றினார். 

Monday, August 28, 2017

செப்., 7 முதல், 'ஸ்டிரைக்' அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அரசு ஊழியர் சங்கம் கூறியுள்ளது.  அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்ரமணியன், மதுரையில் அளித்த பேட்டி:

மறைந்த ஜெயலலிதா அறிவித்தபடி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; புதிய சம்பள விகிதம் வழங்க வேண்டும். அதற்கு முன், இடைக்கால நிவாரணம், 20 சதவீதம் வழங்க
வேண்டும்.இதை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்கள் நடத்தியும், அரசு கண்டுகொள்ளவில்லை. ஆட்சியை தக்க வைத்து கொள்வதிலேயே, அரசு கவனம் செலுத்துகிறது.

செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்கும். மறியல்,காத்திருப்பு, சிறை
நிரப்பும் போராட்டங்கள் நடத்தப்படும். மாநிலத்தில், 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இந்த போராட்டங்களில் ஈடுபடுவர். எனவே மக்கள் நலன் கருதி ஊழியர், ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் பேசி, பிரச்னைகளுக்கு, அரசு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி, 'கட்'

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மற்றும் மதுரை காமராஜர் உட்பட, 10 பல்கலைகளுக்கு, தொலைநிலை கல்விக்கானஅனுமதி கிடைக்கவில்லை. அதனால், பல்கலை நிர்வாகத்தினர் குழப்பமடைந்து உள்ளனர். 

பிளஸ்2 துணைத்தேர்வு வரும் 31 வரை அவகாசம்!

’பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ்2 துணைத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்,’ என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜாக்டோ - ஜியோ போராட்டம் காலாண்டு தேர்வுக்கு பாதிப்பு

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தால், காலாண்டு தேர்வுகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்து, வரும் 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதற்காக, மாவட்ட வாரியாக செயற்குழு கூட்டங்கள் முழுவீச்சில் நடக்கின்றன. 

தற்காலிக பேராசிரியர் நியமனம் பாரதியார் பல்கலையில் எதிர்ப்பு

பாரதியார் பல்கலையின் வரலாறு மற்றும் சுற்றுலா துறைக்கு, தற்காலிக பேராசிரியர்கள் தேர்வு செய்வதற்கான நேர்காணல், சமீபத்தில் நடந்தது. இவர்களுக்கு, மாதம், 12 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள், 2017 - 18ம் கல்வியாண்டு வரை அல்லது நிரந்தர பேராசிரியர்கள் தேர்வு செய்யும் வரை பணிபுரிய உள்ளனர். 

எம்.பி.பி.எஸ்., படிப்பு; அரசு ஒதுக்கீடு, ’ஹவுஸ்புல்’

அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர்த்து, அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின.

திருடவே முடியாது: ஆதார் திட்டவட்டம்

யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம், ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது. நாடு முழுவதும், 115 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள், அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வால் திருடப்படுவதாக, சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.இதை, ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. இதுகுறித்து, ஆதார் ஆணையம் வெளியிட்ட அறிக்கை விபரம்:

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம்

''மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 68, தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலையில் நடந்த, 'புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்.

சவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்?

இன்று முதல் நிர்வாக பணிகளை துவக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய செயலருக்கு, அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் ஆதிக்கத்தை சமாளிப்பது உட்பட, பல சவால்கள் காத்திருக்கின்றன. தமிழக பள்ளிக்கல்வி செயலராக, மார்ச், உதயசந்திரன் பொறுப்பேற்றார். 

மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்!

நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு  குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை அறிந்துகொள்வதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் தங்களுக்கான வருமான வரியை இன்னும் துல்லிய மாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள முக்கியமான வருமான வரி மாற்றங்கள் சிலவற்றைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

Saturday, August 5, 2017

அதிர வைத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்! மிரண்டு போன அரசு!!

தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் சம்பள விவகாரம் தொடர்பாக சென்னை சேப்பாக்கதில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.