Pages

Wednesday, February 15, 2017

தர வரிசையில் இடம் பெற ஆதரவு அளியுங்கள்; துணைவேந்தர்!

”தேசிய தரவரிசை பட்டியலில், பெரியார் பல்கலை இடம்பெற, இணையதளம் மூலம் ஆதரவு அளியுங்கள்,” என, துணைவேந்தர் சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து, சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் பெரியார் பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில், 1.50 லட்சம் பேர் படிக்கின்றனர். 

பல்கலையில், மத்திய அரசின் தேசிய தர நிர்ணய மற்றும் மதிப்பீட்டுக்குழு, 2015ல் ஆய்வு மேற்கொண்டு, ’ஏ’ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை, 2016ல் வெளியிட்ட தரவரிசை பட்டியலில், பெரியார் பல்கலை, தேசிய அளவில், 46ம் இடம், மாநில அளவில், அரசு பல்கலைக்கழகங்களில், இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. 

தற்போது, அப்பட்டியலில் மேலும் முன்னேற்றம் அடைய, பல்கலையில் படித்த மாணவ, மாணவியர், அவர்கள் பெற்றோர், பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், இப்பல்கலை குறித்து, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதனால், http://www.nirfindia.org/perception என்ற இணையதள முகவரியில், தங்கள் மின்னஞ்சல், சுயவிபரங்களை பதிவு செய்து, பல்கலைக்கு ஆதரவு தெரிவிக்கலாம். 

இதன் மூலம், பல்கலையை, தேசிய அளவில், முதல் பத்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தேர்வு செய்ய வாய்ப்பாக அமையும். இன்றைக்குள் (பிப்.,15), பல்கலைக்கு ஆதரவாக ஓட்டுப்போடுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.