Pages

Thursday, October 20, 2016

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட செலவு அனைத்தும்"ஆன்லைன்' மயம் : மத்திய அரசு முடிவு

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், (ஆர்.எம்.எஸ்.ஏ.,) அனைத்து செலவினங்களை ஆன்லைன் கணக்கில் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் எஸ்.எஸ்.ஏ.,வை தொடர்ந்து, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்க்கும் வகையில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் 2009 முதல் அமலில் உள்ளது.


இதன் மூலம் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், நுாலகம், கணினி அறை, கழிப்பறை, குடிநீர் வசதி, பள்ளி மானியம் மற்றும் பணியிடை பயிற்சிகள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் சார்பில் 60:40 என்ற விகிதத்தில் நிதிஒதுக்கீடு செய்கின்றன.தமிழகத்தில் ஆண்டிற்கு 2 ஆயிரம் கோடிக்கு மேல், இத்திட்டம் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்காக, ஒப்பந்ததாரர் உள்ளிட்டோருக்கு முடிந்த பணிகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் ரசீதுகள் அடிப்படையில்பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் எழுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் திட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், அனைத்துபண பரிவர்த்தனைகளையும், ஆன்லைன் கணக்கு எண்களில் மட்டும் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

இதனால் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் பொது நிதிமேலாண்மை திட்டம் (பி.எப்.எம்.எஸ்.,) மூலம் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், பள்ளிகளுக்கு வெள்ளை அடித்தால் கூட ஆன்லைன் கணக்கு மூலம் தான் ஊழியருக்கு சம்பளம் வழங்கும் நிலை ஏற்படும்.இதனால் செய்யாத திட்டப் பணிகளுக்காக போலி 'பில்'கள் மூலம் பணம் பெறுவது போன்ற முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.