Pages

Thursday, October 20, 2016

உடற்கல்வி ஆசிரியர்களின் 21 ஆண்டுகள் சிக்கலுக்கு விடிவு.

அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களின், ஊக்க ஊதியத்திற்கான, 21 ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்கும் போது, அதற்கு இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படும்.

ஆனால், இந்த ஊக்க ஊதியம் வழங்குவதில், 21 ஆண்டுகளாக பிரச்னை நீடித்தது; பலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆசிரியர் சங்கங்களும், அரசுக்கு, பலமுறை கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. இதில், சான்றிதழ் படிப்பு முடித்தோர், 1992க்கு முன், பி.எட்., படிப்பை முடித்திருந்தால், ஊக்க ஊதியம் தரப்படும். மற்றவர்களுக்கு, பி.பி.எட்., - பி.பி.இ.எஸ்., அல்லது பி.எம்.எஸ்., எம்.பி.எட்., - எம்.பி.இ.எஸ்., மற்றும் யோகாவில் முதுநிலை டிப்ளமோ முடித்தால், இரண்டு ஊக்க ஊதியம் தரப்படும்.

இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும்உடற்கல்வி இயக்குனர்கள் சங்க, மாநில பொதுச் செயலர், டி.தேவி செல்வம் கூறுகையில், ''21 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திய, அரசுக்கு நன்றி. ஆசிரியர்கள், உயர் கல்வி தகுதி பெற்ற நாள் முதல் கணக்கிட்டு, இந்த சலுகையை வழங்க வேண் டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.