Pages

Thursday, October 20, 2016

10 நாட்களில் 'செட்' தேர்வு முடிவு

கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவை, 10 நாட்களுக்குள் வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்கலை மற்றும்கல்லுாரிகளில், பேராசிரியராக சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

சில மாநிலங்களில், கல்லுாரி, பல்கலைகளில், பேராசிரியராக சேர, மாநில அளவிலான, செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழக அரசு சார்பில், செட் தேர்வு, பிப்., மாதம் நடந்தது; இதில், 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வை நடத்திய, முன்னாள் உயர் கல்வி செயலர் அபூர்வா, வேறு துறைக்கு மாற்றப்பட்டதால், தேர்வு முடிவு வெளியிடப்படாமல், கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசின் நெட் தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, அக்., 17ல் துவங்கியது.

செட் தேர்வு முடிவை வெளியிட்டால், அதில் தேர்ச்சி பெறாதோர்,நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம். அதற்கு வசதியாக, செட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. செட் தேர்வு முடிவு வெளியான பின், நெட் தேர்வை நடத்த வேண்டும் என, வழக்கு தொடர, நெட், செட் சங்கத்தினர் முடிவு செய்தனர். இதனால், 10 நாட்களுக்குள், செட் தேர்வு முடிவை வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்து உள்ளது; அதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.