Pages

Monday, July 25, 2016

ஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு உத்தரவு.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் 903 புதிய பணியிடங்களை தோற்றுவித்து அரசு முதன்மைசெயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்., 23ல் முடிகிறது. 

அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்கள் உள்ளதால் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை கவனிக்க புதிய பணியிடங்களை ஏற்படுத்தஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அரசை கேட்டு கொண்டார். அதை ஏற்று ஊரக வளர்ச்சி இயக்ககத்தில் உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர், கணினி இயக்குபவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர்,கணினி இயக்குபவர், ஊராட்சி ஒன்றியங்களில் உதவியாளர், கணினி இயக்குபவர் பணியிடங்கள் 903 ஏற்படுத்தப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர்கள் அவர்களுக்கு சம்பளம் மற்றும் படிகளுக்கான பட்டியல் தயாரித்து ஏற்பளிப்பு வழங்கவும் அதிகாரமளிக்கப்படுகிறது என அரசு முதன்மை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.