Pages

Monday, July 25, 2016

சிறுபான்மையின மாணவர் கல்வி உதவி தொகை

சிறுபான்மையின மாணவ, மாணவியர் மேற்படிப்பு திட்டத்தில் கல்வித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ் 1, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு, பள்ளி மேற்படிப்பு திட்டத்தின் கீழ், கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.


அதற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர், பாதுகாவலரின் வருமானம் ஆண்டுக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரில், வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஐ.ஐ.டி., டிப்ளமோ, பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை மாணவ, மாணவியரின் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்தப்படும். எனவே, வங்கி கணக்கு எண், வங்கி குறியீடு எண், ஆதார் எண்களை அவசியம்  சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.