அரசு பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு இருமுறை டி.என்.பி.எஸ்.சி., மூலம் துறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தந்த அலுவலக பணிக்கேற்ப, வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும். இதில், தேர்ச்சி பெறுவதன் மூலம், ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் என்பதால், அரசு பணியாளர் கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வர்.
இந்த தேர்வு, தமிழகம் முழுவதும் நாளை, 24ம் தேதி துவங்குகிறது. 31ம் தேதி வரை நடக்கும் தேர்வுக்கு, கடந்த மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள், தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தங்களது விவரங்களை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.