தமிழகத்தில் 6வது முறை முதல்வராக பொறுப்பேற்கும் ஜெ., இன்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து அமைச்சர்கள் பட்டியலையும் கவர்னரிடம் அளித்தார்.
134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி கட்டிலில் ஜெ., அமர்கிறார். நேற்று மாலை (20 ம்தேதி ), மாலை நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஜெ., அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி முதல்வராக ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரும் கடிதத்தை கவர்னரை நேரில் சந்தித்து ஜெ., இன்று கொடுத்தார். இன்று மாலை அமைச்சர் பட்டியல் வெளியிடப்பட்டது. துறை ரீதியிலான அமைச்சர்கள் பட்டியல் விபரம் வருமாறு....
ஜெயலலிதா : இந்திய ஆட்சிப்பணி, காவல், பொதுநிர்வாகம் :
ஓ.பன்னீர்செல்வம் : நிதித்துறை
திண்டுக்கல் சீனிவாசன் : வனத்துறை
எடப்பாடி பழனிச்சாமி : பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை
செல்லூர் ராஜூ : கூட்டுறவு மற்றும் தொழிலாளர் நலத்துறை
தங்கமணி : மின்சாரம், மது மற்றும் ஆயத்தீர்வு
எஸ்.பி.வேலுமணி : நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி
கே.பி.அன்பழகன் : உயர்கல்விதுறை
ஜெயக்குமார் : மீன்வளத்துறை
டாக்டர் சரோஜா : சத்துணவு மற்றும் சமூக நலன்
காமராஜ் : உணவு, சிவில் சப்ளை மற்றும் இந்து அறநிலையத்துறை
சி.வி.சண்முகம் : சட்டம், சிறை மற்றும் நீதித்துறை
கருப்பண்ணன் : சுற்றுச்சூழல்
எம்.சி.சம்பத் : தொழில்துறை
ஓ.எஸ்.மணியன் : ஜவுளி மற்றும் கைத்தறி
உடுமலை ராதாகிருஷ்ணன் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சி
விஜயபாஸ்கர் : சுகாதாரம் மற்றும் குடும்பநலன்
எஸ்.பி.சண்முகநாதன் : பால்வளம்
துரைக்கண்ணு : விவசாயம் மற்றும் கால்நடை
கடம்பூர் ராஜூ : தகவல் மற்றும் விளம்பரம்
ஆர்.பி.உதயகுமார் : வருவாய்த்துறை
ராஜேந்திர பாலாஜி : ஊரகத்தொழில்துறை
பெஞ்சமின் : பள்ளிகல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
கே.சி.வீரமணி : வணிகவரி
வெல்லமண்டி நடராஜன் : சுற்றுலாத்துறை
எஸ்.வளர்மதி : பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்
வி.எம்.ராஜலெட்சுமி : ஆதிதிராவிட, பழங்குடியினர் நலன்
டாக்டர் மணிகண்டன் : தகவல் தொழில்நுட்படம்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் : போக்குவரத்து துறை
இதுதவிர தற்காலிக சபாநாயகராக செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.