Pages

Monday, May 23, 2016

எந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்?'அண்ணா பல்கலை பட்டியல் வெளியீடு

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜி., கல்லுாரிகளில் சேர்வதற்கான குழப்பத்தை தீர்க்க, கடந்த ஆண்டு, 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பெரும்பாலானோர், மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்புகளில் சேர விரும்புகின்றனர். தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு சார்பில், ஒற்றைச் சாளர முறையில் அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.


வெளிப்படையாக...இந்த கவுன்சிலிங்கில், கணினி வழியில் மதிப்பெண்கள் தர வரிசை படுத்தப்பட்டு, வெளிப்படையாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தர வரிசையில், மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் படி முன்னுரிமை வழங்கப்படும்; முன்னணியில் உள்ளோருக்கு, அவர்களது விருப்ப பாடமும் விருப்பமான கல்லுாரியும் ஒதுக்கப்படும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் தங்களது கட் ஆப் மதிப்பெண்ணுக்கு, எந்த பாடம் கிடைக்கும்; எந்த கல்லுாரியில் இடம் கிடைக்கும் என்ற குழப்பத்தில் உள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த ஆண்டு, 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியலை, அண்ணா பல்கலை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இன்ஜி., கவுன்சிலிங்கில், எந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எந்த பாடம், எந்த கல்லுாரியில் இடம் ஒதுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதை ஆய்வு செய்து, அதனடிப்படையில் இந்த ஆண்டில், எந்த பாடத்திற்கு எந்த கல்லுாரியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை மாணவர்களும், பெற்றோரும் ஓரளவு முடிவு செய்து, குழப்பமின்றி
கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

ஆலோசனை:இந்த கல்வி ஆண்டில், இன்ஜி.,க்கான கட் ஆப், முந்தைய ஆண்டை விட, 0.25 முதல், 1 வரை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப மாணவர்கள் தங்களுக்கான பாடப் பிரிவுகளை திட்டமிடலாம் என, கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.