Pages

Thursday, January 14, 2016

பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

பல நாடுகளில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்ட, அரசு ஊழியர் ஓய்வூதிய நிதியில் சரிவு ஏற்பட்டுஉள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 2003 ஏப்., 1க்கு பின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
இதற்காக சம்பளத்தில் குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படுகிறது. இத்தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் மத்திய, மாநில அரசுகள் செலுத்துகின்றன. இதுவரை ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை ஆணையத்தில் செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்தியா வின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம், புதிய ஓய்வூதிய திட்டத்தில் வசூலித்த நிதியில் ரூ.15 ஆயிரம் கோடியை, பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. ஏற்கனவே பல நாடுகளில், 10 ஆண்டுகளுக்கு முன் பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை முதலீடு செய்யப்பட்டு உள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சியால் இத்தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. எஸ்தோனியா நாட்டில் ஓய்வூதிய நிதி 1.7 சதவீதம் மைனசில் சென்று உள்ளது. செக் குடியரசு, ஜப்பானில் தலா 0.3 சதவீதம், அமெரிக்காவில் 0.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதேபோல் 20 நாடுகளில் 1 முதல் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்து உள்ளது. புதிய ஓய்வூதிய திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏங்கல்ஸ் கூறியதாவது: இந்தியாவில் முதற்கட்டமாக 15 சதவீத ஓய்வூதிய நிதி, பங்குசந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. தொடர்ந்து அந்த சதவீதம் அதிகரிக்கப்படும். பல நாடுகளில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஓய்வூதிய நிதி சரிவையே கண்டு உள்ளது. நம் நாட்டில் ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் முதலுக்கே மோசம் ஏற்படும், என்றார்.

1 comment:

  1. TAMIL NADU GOV. EMPLOYEES AND SCHOOL TEACHERS NEED NOT WORRY ABOUT THE SHARE INVESTMENT OF THEIR CPS AMOUNT. BECAUSE TAMILNADU NOT DEPOSITED ANY CPS AMOUNT IN PFRDA ONLY THE NAME CPS BUT NO FIXED SCHEME ANNOUNCED SO FAR.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.