Pages

Thursday, January 14, 2016

ரயில்வேயில் 18 ஆயிரம் பணிக்கு தேர்வு:விண்ணப்பிக்க ஜன.25 கடைசி

மத்திய ரயில்வே துறையில் 18 ஆயிரத்து காலிப்பணியிடங்களை நிரப்ப, தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன.,௨௫ க்குள் 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் விபரம் :ரயில்வேயில் கமர்ஷியல் அப்ரண்டிஸ்- 703, டிராபிக் அப்ரண்டிஸ்- 1645, என்கொயரி மற்றும் ரிசர்வேஷன் கிளார்க்- 127, கூட்ஸ் கார்டு- 7561, ஜுனியர் அக்கவுன்ட்ஸ் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட்- 1205, சீனியர் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட்- 869, உதவி ஸ்டேஷன் மாஸ்டர்- 5942, டிராபிக் அசிஸ்டன்ட்- 166, சீனியர் டைம்கீப்பர்4. இப்பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி.,பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. இதில் தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை ரயில்வேயில்-986, திருவனந்தபுரத்தில்- 488 பணியிடங்கள் அடங்கும். தேர்வில் 100 வினாக்கள் அப்ஜெக்டிவ் வகையில் கேட்கப்படும். பொது அறிவு, ரீசனிங், நுண்ணறிவு, கணிதத்துறை வினாக்கள் இடம்பெறும். தேர்வு90நிமிடங்கள் நடக்கும்.தவறான விடைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண் கழிக்கப்படும். ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம். தமிழகத்தில் 17 மையங்களில் தேர்வு நடக்கும். ஒருவர் 5 மையங்களை தேர்வு செய்யலாம். தேர்விற்கு 'ஆன் லைன்' மூலமே விண்ணப்பிக்க முடியும். கட்டணம் ரூ.100. சில பிரிவினருக்கு கட்டணச் சலுகை உண்டு. ஜன., 25 க்குள் www.rrbchennai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.