தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அந்தச் சங்கத்தின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
மாநில செய்தித் தொடர்பாளர் ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் சேகர், மண்டல செயலர் டி.செல்வம், மாவட்ட அமைப்பு செயலர் கே.அருண்குமார், மாவட்ட மகளிரணிச் செயலர் எஸ்.ஞானசிகாமணி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், நிகழ் கல்வியாண்டில் (2015-16) தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும். கூடுதலாக உருவாக்கப்படும் பணிடங்களை முறையான கலந்தாய்வின் மூலம் நிரப்ப வேண்டும். அனைத்து தாற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தலைமையிடச் செயலர் எம். முருகன், மாவட்டத் துணைத் தலைவர் க.காவேரி, செய்தித் தொடர்பாளர் ஜி.ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.