Pages

Friday, August 28, 2015

மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க ஏற்பாடு

பள்ளிகளில் கலை பண்பாட்டுத்துறை துவங்க வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தொடக்க கல்வி பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, அனைவருக்கும் கல்வித்திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, பள்ளிகளில் கலை பண்பாட்டுத்துறை மன்றம் ஏற்படுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மன்றங்களை உருவாக்கி மாணவர்கள் இடையே மனிதாபிமான பண்பு, மொழிப்பற்று, நாட்டுப்பற்று, பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம் போன்றவற்றை வளர்க்க வேண்டும். பள்ளி நூலகங்களில் பல்வேறு வகையான நூல்களை மாணவர்கள் படிக்க வசதி ஏற்படுத்த வேண்டும். ஓவியம், கோலப்போட்டி, நடனம், இசை, வினா- விடை போன்ற போட்டிகள் நடத்த வேண்டும். 

மாணவர்கள் இடையே கலந்துரையாடல் திறனை வளர்க்க, குழு மற்றும் ஒருவரோடு, ஒருவர் உரையாடும் வகுப்புகளை ஏற்படுத்த வேண்டும். விடுகதை கூறுதல், கதை, நகைச்சுவை கூறுதல் போன்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கட்டுரை, தமிழ், இலக்கியம், கவியரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும். பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, பள்ளி செல்லா மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்ய வேண்டும். 

பெண் கல்வியின் மகத்துவம், பெண்ணுரிமை, ஆணுக்கு பெண் நிகர் தலைப்புகளில் கிராமப்புறங்களில் கலை நிகழ்ச்சி மற்றும் முகாம்களை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில், இது குறித்து பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, கல்வித்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக குடிநீர் கட்டண நிலுவையை செலுத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.