Pages

Friday, August 28, 2015

சுகாதாரப் புள்ளியிலாளர், புள்ளியில் உதவியாளர்; சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு மருத்துவ சார்நிலையில், வட்டார சுகாதாரப் புள்ளியிலாளர் மற்றும்  பொது சுகாதார சார்நிலை பணியில் புள்ளியில் உதவியாளர் போன்ற பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் செப்.,1ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


மேலும் அறிக்கையில்:

மேற்காணும் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 26.02.2011 அன்று நடைபெற்றது.  மேற்படி பதவிகளில் வட்டார சுகாதாரப் புள்ளியிலாளர் பதவிக்கான நேர்காணல் தேர்வு கடந்த 19.08.2014 அன்று நடைபெற்றது. மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு/ நேர்காணல்  தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட 101 விண்ணப்பதாரர்களில் 39 விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணல் தேர்வில் கலந்து கொண்டனர் இந்நிலையில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளத் தவறிய விண்ணப்பதாரர்களுக்கு பதிலாக 61 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு/ நேர்காணல்  தேர்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விண்ணப்பதாரர்களுக்கும் புள்ளியில் உதவியாளர் பதவிக்கான 36 விண்ணப்பதாரர்களுக்கும் சான்றிதழ் சரிபார்பிர்க்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.