Pages

Tuesday, February 10, 2015

கருத்துக்கணிப்பையும் மிஞ்சிய வெற்றி ; ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டம்

டில்லி சட்டசபை தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்பையும் மிஞ்சி ஆம் ஆத்மி பெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 70 தொகுதிகள் கொண்ட டில்லி சட்டசபையில் 35 முதல் 45 தொகுதிகள் வரை ஆம் ஆத்மி வெற்றி பெரும் என பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பா.ஜ., தரப்பில் கருத்துக்கணிப்புக்கள் தவறானது என்றும் நாங்களே வெற்றி பெறுவோம் என்றும் சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தது.
ஆனால் ஆம் ஆத்மி பெரும்பான்மைக்கும் மேல் வெற்றியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஓட்டு எண்ணிக்கை நிலவரப்படி ஆம் ஆத்மி 66 தொகுதிகளிலும், பா.ஜ., 3 தொகுதிகளிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் முன்னணி வகித்து வருகிறது. கிரண் பேடியும் பின்னடைவு: பா.ஜ., முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியும் பின்னடைவு அடைந்து வருகிறார். கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட அவர் ஆம்ஆத்மி வேட்பாளரை விட ஆயிரம் ஓட்டுக்கள் பின்தங்கியுள்ளார். காங்., பிரசார தலைவர் அஜய்மக்கான் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். 


தோல்விக்கு பொறுப்பேற்பு; இந்த தோல்விக்கு தான் முழு பொறுப்பை ஏற்று கொள்வதாக கிரண்பேடி கூறியுள்ளார். இந்த மேட்சில் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனித சக்தி வெற்றி பெற்றுள்ளது. என கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.