Pages

Tuesday, February 10, 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு

ஆதரவுக் கடிதத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனிடம் வழங்கும் சங்கத்தின் மாநில நிர்வாகிகள்.ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவு தெரிவித்து, உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனிடம் பணி ஓய்வு பெற்ற  தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி இடைநிலை, சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆதரவு கடிதம் அளித்துள்ளனர்.


 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற இடைநிலை சிறப்பாசிரியர்களுக்கு வழங்குவதற்கு அரசாணை பிறப்பித்து, நிறைவேற்றியதை வரவேற்றும், ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதற்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று இச்சங்கத்தில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆதரவு கடிதத்தையும் வழங்கியுள்ளனர்.

    சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கே.சுப்பிரமணியன், நல்லாசிரியர் ஏ.சி.சிவபாலு (தேனி) திருமலைசாமி, மாணிக்கம், ஈங்கூர் சேதுபதி, ரெங்கசாமி, சிதம்பரம், பாலகிருஷ்ணன், சுந்தரம் உள்பட பலர் உயர் கல்வித்துறை அமைச்சரிடம் வழங்கினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.