Pages

Tuesday, January 13, 2015

கிராமப்புற ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் : ஜி.கே. வாசன் கோரிக்கை

கிராமப்புற ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,


தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தர ஊதியம் ரூபாய் 4,200 வழங்க வேண்டியும், பழைய ஓய்வூதிய திட்டம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு, பதவி உயர்வு, பள்ளிகளின் தரம் உயர்த்துதல், காலியான பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக ஆசிரியர் கூட்டணி போராடி வருகிறது.

தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு, மத்திய அரசு ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அரசை அணுகி, அதன்பின் உயர் நீதிமன்றத்தையும் அணுகினார்கள். உயர் நீதிமன்றம் "மனுதாரர்களின் - ஆசிரியர்களின் - கோரிக்கையை பரிசீலித்து, 8 வாரங்களுக்குள் தக்க பதில் தர வேண்டும்" - என்று தமிழக அரசை அறிவுறுத்தியது.

அதனை பரிசீலித்த தமிழக அரசு நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் ஊதியத்திற்கு இணையாக, கிராமங்களில் பணிபுரியும் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாது; காரணம் கிராமங்களில் செலவு குறைவு, இரண்டாவது இக்கோரிக்கையை ஏற்றால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். அதனை ஏற்கும் நிலையில் தமிழக அரசின் நிதிநிலை இல்லை" - என்ற இரண்டு காரணங்களின் அடிப்படையில், ஆசிரியர்களின் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.