Pages

Tuesday, January 13, 2015

SSTAவின் இன்றைய மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு; பின்னேற்பு வேண்டுபவர்களுக்கு அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!!!

12.01.2015 இன்று SSTA மாநில பொறுப்பாளர்கள் சென்னையில் மதிப்பிற்குரிய கல்வி துறை செயலாளர் மற்றும் நமது தொடக்க கல்வித்துறை இயக்குனர் அவர்களையும் சந்தித்து புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் கடந்த முறை வலியுறுத்திய CRC சிறப்பு தற்செயல் விடுப்பு ,பின்னேற்பு வழங்க வேண்டியவர்களுக்கு அரசாணையும் கோரி வலியுறுத்தப்பட்டது. அரசு விரைவில் CRC க்கான அரசாணை விரைவாக வெளியிடப்படும் என்றார். பின்னேற்பு வேண்டுபவர்கள் பட்டியல் பெறப்பட்டு தொகுத்து விரைவில் அரசாணை வெளியிடுவதாக உறுதியளித்தார். 2012-TET ஆசிரியர்கள் தகுதிகாண் பருவம் முடிக்க உள்ள சிரமங்கள் எடுத்துரைக்கப்பட்டது. எந்த ஒன்றியத்திலாவது 16.12.2014  தகுதி காண் பருவம் முடித்து  உண்மை தன்மை பெறாமல் இருந்து, முன்னுரிமை பட்டியலில் பெயர் சேர்க்கபடாமல் இருப்பின் அந்த ஒன்றியத்தின் பெயர் கோரப்பட்டுள்ளது. உங்கள் ஒன்றியத்தில் அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் அவ்வாறு இருப்பின் உடனடியாக கீழ்கண்ட எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் 9843156296-ராபர்ட், SSTA மாநில பொதுசெயலாளர் மேலும் இப்புத்தாண்டில் ஆசிரியர்களின் குறைகளை கடந்தாண்டை போல தொடர்ந்து  களைந்து கொடுக்க பணிந்து கேட்டுக்கொள்ளப்பட்டது. என்றும் ஆசிரியர்களுக்கான SSTA .

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.