Pages

Monday, December 22, 2014

வறட்டுக் கவுரவம் தான் காரணம்!

அரசுப் பள்ளிகளில், இன்று எல்லாமே இருக்கிறது. அப்படி இருந்தும், மக்கள், அரசுப் பள்ளிகளை நாடாமல், ஆங்கிலப் பள்ளிகளை நாடுவதற்கு, ஆங்கில மோகம் தான் காரணம் என, பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சத்தியமாக அது காரணம் இல்லை; வறட்டுக் கவுரவம் தான் காரணம்!எல்.கே.ஜி.,க்கே, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வாங்கும் ஆங்கிலப் பள்ளியில், தாய், தன் இரண்டரை வயது குழந்தையை சேர்க்கிறார் என்றால், அதில் உள்ள பெருமையை அனுபவிப்பதற்காக மட்டுமே என்பது, எத்தனை பேருக்குப் புரியும்!

*எம் புள்ளையை, எல்.கே.ஜி.,யில் சேர்க்கிறதுக்குள்ள, எனக்கு போதும் போதும்னு ஆயிருச்சு; இதுவரைக்கும், 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேலே செலவாயிருச்சு.
*எம் புள்ளைக்கு, சுத்தமா தமிழே வர மாட்டேங்குது. நானும் சொல்லிக் குடுக்குறேன்... படிக்க மாட்டேங்கிறான்.
*அந்த ஸ்கூல்ல இடம் கிடைக்கிறது சாதாரணமில்லை. அதுக்காக நாங்க, பெரிய பெரிய ஆட்களை எல்லாம் சிபாரிசு பிடிச்சு, ஒரு வழியா எம் புள்ளையை அந்த ஸ்கூல்ல சேர்த்தோம்.மேற்கண்ட இந்த வசனங்களை பேசாத பெண்களை, காண்பது அரிது. இந்தப் பெருமைக்காகவே, அவர்கள், எத்தனை லட்சம் ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக உள்ளனர்.கணவனின் சம்பளம் எவ்வளவு, வீட்டு மாத பட்ஜெட் எவ்வளவு... அனைத்தும் அறிந்திருந்தாலும், வெளியே பெருமை பேசுவதின் ஆனந்தம் எப்படி இருக்கும் என்று, அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்.இப்படி, அக்கம் பக்கத்துப் பெண்கள், 'டாம்பீகம்' பேசும்போது, அக்கூட்டத்தில், 'என் பிள்ளை அரசுப் பள்ளியில் படிக்கிறான்' என்று சொன்னால், அந்தக் கூட்டத்தில் தனிமைப்பட்டு விடுவோம் என்ற காரணத்திற்காகவே, எத்தனை பெண்கள், அடம்பிடித்து, கணவன்களை கடன்காரனாக்கி, பெருமைக்காக, பிள்ளைகளை ஆங்கில மீடியத்தில் சேர்க்கின்றனர் தெரியுமா!பொதுவாக ஆண்கள், தன் குழந்தை, அரசுப் பள்ளியில் படிப்பதைத் தான் விரும்புவர்; ஆனால், மனைவியரின் தொல்லை தாங்காமல், சக்திக்கு மீறி கடன் வாங்கி, நகையை அடகு வைத்து, கடைசியில் நடுத்தெருவுக்கு வரும்போது தான், இதற்கு மேல் செலவு செய்ய முடியாது என தோன்றும்.இறுதியில், அக்குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்கின்றனர். குழந்தை, ஆங்கிலமும் புரியாமல், தமிழும் தெரியாமல் திணறுவான்.இப்போது, எந்தக் குழந்தை, வீட்டில் விளையாட அனுமதிக்கப்படுகிறது? அதிகாலையில் எழுந்து குளியல், இறுக பற்றிய சீருடை, பள்ளியில் கண்டிப்பு, பள்ளி முடிந்ததும் டியூஷன், இரவு வீட்டுப் பாடம்... பாவம்!என்றைக்கு நம் பெண்களின் இந்த வறட்டுக் கவுரவம் போகுமோ, அன்றைக்குத்தான், இந்த கொடுமையும் போகும்.

1 comment:

  1. வறட்டுக் கவுரவம் மட்டும் காரண்மல்ல,
    ஆசிரியர்கள் பள்ளிக்கு நேரத்திற்கு வராமை,
    தொடர்ந்து கைபேசியைப் பயன்படுத்துவது,
    சொந்த வேலையைப் பார்த்துக்கொண்டு
    பிறபணி என்று பள்ளிக்குவராமல் இருப்பது,
    விடுப்பெடுத்தால் வருகைப்பதிவேட்டில்
    பதிவது கிடையாது,
    (ஒருவர் மாற்றி ஒருவர் இதையே செய்வது)
    கேட்டால் செருப்பு,புத்தகம்,நோட்டு,பயிற்சி,
    அலுவலகம் என பட்டியல் நீளும்.
    இதே நிலை நீடித்தால்
    தொடக்கக்கல்வியை முழுவதும்
    மக்கள் புரக்கணிக்கப்போவது நிச்சயம்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.