Pages

Monday, December 22, 2014

ஆசிரியையிடம் பட்டபகலில் கத்தியைக் காட்டி, மிரட்டி 14 சவரன் நகைகள் கொள்ளை!

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்(வயது 42). இவர், அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வேலம்(37). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

ஆசிரியை வேலம், பள்ளி முடிந்து தனது மொபட்டில் வீட்டிற்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், திடீரென வேலமிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் கிடந்த 14 பவுன் தங்க சங்கிலியையும், விலை உயர்ந்த செல்போனையும் பறித்தனர்.
இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர், வாலிபர்களை தட்டிகேட்க முயன்றார். அப்போது அவரையும் தாக்கிவிட்டு வாலிபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இது பற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.