பாலியல் பலாத்கார நிகழ்வில், தமிழக அளவில், வேலுார் மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வேலுார் மாவட்டம், பாலியல் தொடர்பான குற்றங்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு, 41 பாலியல் பலாத்கார வழக்குகள், 37 பாலியல் தொடர்பான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில், பாலியல் பலாத்கார குற்றங்கள், வேலுார் மாவட்டத்தில் அதிகம் நடப்பதாக, மாணவர்கள் மற்றும் பெண்கள் சங்கம் இணைந்து எடுத்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் இரண்டாவது இடத்திலும்; தர்மபுரி மூன்றாவது இடத்திலும் உள்ளன. சென்னை, நான்காவது இடத்தை பிடித்துள்ளது
வேலுார் மாவட்டத்தில், கிராமப் புறங்களில் தான் அதிகளவு பாலியல் பலாத்கார குற்றங்கள் நடப்பதாக தெரிய வந்துள்ளது. பள்ளி மாணவியர், அதிக தொல்லைக்கு உள்ளாகி யுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.