Pages

Monday, December 22, 2014

தமிழ் ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 2010-11 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்களில் தமிழ் பாட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் (நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதிக்கு உட்பட்டவர்கள்) பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.