பெருக்கல் கணக்குகளை மிக எளிதாக தீர்க்கும் வழிமுறைகளை காணும் வரிசையில், எந்தவொரு எண்ணையும் 9ஆல் மிக எளிதாக பெருக்கும் முறையை இங்கு காணலாம். இதற்கு நாம் பின்பற்ற வேண்டியது மிகச்சிறிய வழிமுறைகள் தான்.
===> முதலில் நாம் 9ஆல் பெருக்க வேண்டிய எண்ணை, கடைசி ஒரு இலக்கத்தை மட்டும் தனிமைப்படுத்தி, மீதி இலக்கங்களை தனியாக பிரித்தெழுதிக்கொள்ள வேண்டும். உதாரணமாக 264 என்ற எண்ணை 9ஆல் பெருக்க, கடைசி இலக்கமான 4ஐ தனிமைப்படுத்தி, 26ஐ பிரித்து எழுத வேண்டும்.
===> பிரித்தெழுதப்பட்ட எண்ணுடன் ஒன்றை கூட்டி, அதனை பெருக்க வேண்டிய எண்ணிலிருந்து கழிக்க வேண்டும்.
பிரித்தெழுதப்பட்ட 26ன் உடன் 1ஐ கூட்ட, 27 விடையாக கிடைக்கும். அவற்றை 264ல் இருந்து கழிக்கும் போது கிடைக்கும், 237ஐ எடுத்தெழுத வேண்டும்.
===> அடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட எண்ணை 10லிருந்து கழித்து, முன்னர் கிடைத்த எண்ணுக்கு பின்னால் எழுத நமக்கு தேவையான விடை சரியாக கிடைத்து விடுகிறது.
இதில் தனிமைப்படுத்தப்பட்ட எண் 4ஐ 10ல் இருந்து கழிக்கும் போது, விடையாக 6 வருகிறது. இவற்றை முன்பு கண்டுபிடித்த 237ன் கடைசி இலக்கமாக எழுத, 264ஐ 9ஆல் பெருக்க கிடைக்கும் விடையான 2,376 என்பது எளிதில் நமக்கு கிடைக்கிறது.
மற்றுமொரு உதாரணமாக.,
7635 * 9 = ?
763 5
763 + 1 = 764 7635
764 -
-------
6871
-------
இப்போது 10 - 5 = 5,
இதை முன்பு கிடைத்த விடையுடன் சேர்த்து எழுத, 68715
ஃ 7635 * 9 = 68,715.....
oor ennai 9 aal perukka ,athan valppuram oru 0 ittu antha ennilirunthu 9 aal perukka vediya ennai kazhikka vendum
ReplyDeleteExample 643x9
6430
-643
------
5787
------
Super
ReplyDelete