Pages

Thursday, December 25, 2014

கற்பித்தலில் ஆசிரியர்களின் புதிய உத்திகளை பதிய வேண்டுகோள்

பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதிய உத்திகள் கையாண்டிருந்தால், அவற்றை இணையதளத்தில் பதிவுசெய்ய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2012 முதல் பள்ளிக் கல்வியில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை மேலும் வலுப்படுத்த வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் மேம்படுத்துவதற்காகவோ, மாணவர்களின் முழுமையான திறன் வளர்ச்சிக்காகவோ, பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவோ ஏதேனும் புதிய உத்திகளை செயல்படுத்தியிருப்பார்கள்.
அந்த உத்திகளை மற்ற ஆசிரியர்களோடு பகிர்ந்து கொள்ள பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. ஆசிரியர்கள் இதுபோன்ற உத்திகளை வெளிப்படுத்த இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் (tnscert.org/innovation) பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, 9942173355 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.