நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வேலைக்கு வரும்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் துரைபாண்டியன் கூறியதாவது: ஆண்டு தோறும் வழங்கப்படும் 17 நாள் விடுப்பில், 14 நாட்கள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுபவை. மீதி உள்ள 3 நாட்கள் அந்தந்த மாநிலங்களில் பண்டிகை நாட்களை பொறுத்து அறிவிக்கப்படும். இது போன்று நடைமுறை உள்ள நிலையில், டிசம்பர் 25ம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் வருகிறது. அதனை கொண்டாடும் வகையில், மத்திய அரசு பள்ளிகளான நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறவில்லை. விருப்பமுள்ளவர்கள் வரலாம் என அறிவிக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, மத்திய அரசு ஊழியர்கள் கிறிஸ்துமஸ் அன்று பணிக்கு வர வேண்டும் என உத்தரவு நகலாக இல்லாமல், சர்க்குலராக இளைஞர்நலன், கல்வி, நகர்புற அமைச்சகங்களில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி எங்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை. அப்படி பணிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டால், நாங்கள் யாரும் வர மாட்டோம். இதில் உறுதியாக உள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.