"தினமலர்' ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வழங்கிய அறிவுரை தேர்வு பயத்தை நீக்கியதாக,' இதில் பங்கேற்ற 10ம் வகுப்பு,பிளஸ் 2 மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: ஏ,வர்ஷினி (10ம் வகுப்பு,தேவாங்கர் மேல்நிலை பள்ளி, அருப்புக்கோட்டை): தினமலர் ஜெயித்துகாட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைந்துள்ளேன். ஆசிரியர்கள் வழங்கிய, தேர்வை பயமின்றி எதிர் கொள்வது, முக்கிய கேள்விகள், தன்னம்பிக்கை டிப்ஸ்கள் தேர்வுக்கு எங்களை முழு அளவில் தயார் செய்வதற்கு உதவியாக இருந்தது.
டபூள்யூ.ஜெப்சன் (10ம் வகுப்பு, செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி, காரியாபட்டி): தேர்வில் கேட்கப்படும் கேள்விகள், நூறு மார்க் தவறவிட காரணமாக இருக்கும் கேள்விகள், எதிர்கொள்ளும் முறைகள், தினமலர் வழங்கிய உடம்பும், மனசும் நல்லா இருக்கணும் புத்தகம் ஆகியவை மிகுந்த பயனுள்ள வகையில் இருந்தது. இதனால் தேர்வில் அதிக மார்க் பெறலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எம்.நந்தினி, (பிளஸ் 2 ,எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலை பள்ளி, அருப்புக்கோட்டை): தேர்வை நினைத்து பயத்தோடு இருந்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசிரியர்களின் அறிவுரைகளால் தற்போது பயம் விலகியுள்ளது. முக்கிய வினாக்கள், எந்த கேள்விகளை எழுதினால் அதிக மார்க் கிடைக்கும் போன்ற அறிவுரைகள் மிகுந்த பயனை தந்துள்ளது.
எஸ்.மீனாட்சி( பிளஸ் 2 ,காந்தி வித்யாலயா மேல்நிலை பள்ளி, ராமசாமிநகர்): தமிழ் மீடியம் என்பதால் ஆங்கிலம் பாடம் பற்றிய பயமிருந்தது. ஆசிரியர் ஆங்கில தேர்வை பயமின்றி எழுதுவது, அதிக மார்க் பெறுவதற்கான வழிகள் , தன்னம்பிக்கை டிப்ஸ்கள் போன்றவைகள் எனக்கு முழு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.அரவிந்தராஜா, (பிளஸ் 2, தேவாங்கர் ஆண்கள் மேல்நிலை பள்ளி, அருப்புக்கோட்டை): சராசரி மாணவனான எனக்கு இந்த நிகழ்ச்சியை அதிக மார்க் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை தந்துள்ளது. தேர்வில் தயாராவது எப்படி, கேள்விகளுக்கு விடையளிக்கும் முறைகள் போன்றவற்றில் ஆசிரியர்களின் குறிப்புகள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.