பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும், தனித் தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு பதிவு செய்யாவிட்டால், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்த தேர்வுத்துறை அறிவிப்பு: மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில், தங்கள் பெயரை பதிவுசெய்து, பயிற்சிபெற, ஜூன் 11 - 30 மற்றும் அக்., 29 - நவ., 7ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டது.
அந்தப் தேதிகளில் பெயர்களை பதிவு செய்யாத தனித் தேர்வர்களும், இ.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்களும், 10ம் வகுப்பு தேர்வை எழுத விரும்பினால், இன்று(டிசம்பர் 1), அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் தங்கள் பெயரை பதிவுசெய்து பயிற்சி பெறலாம்.
செய்முறை பயிற்சி வகுப்பில் சேருவதற்கு உரிய பள்ளிகள் விவரங் களை, அரசு தேர்வு சேவை மையங்களை அணுகி, தெரிந்து கொள்ளலாம். மேலும், www.tndge.in என்ற இணையதளத்திலும், முதன்மை கல்வி அலுவலகங்களிலும், தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை பயிற்சிக்கு பெயர் பதிவு செய்யாத தனித்தேர்வர்கள், மார்ச், பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.