Pages

Monday, November 3, 2014

மொபைல் போன் மூலம் நூதன மோசடி; உஷாரா இருக்க "அட்வைஸ்'


மொபைல் போன் வைத்திருப்போரை குறிவைத்து, புதிய மோசடி அரங்கேறி வருகிறது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசும்போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபகாலமாக மொபைல் போன் வாடிக்கையாளர்கள் பலருக்கு, ஒரு போன் வருகிறது. எதிர்முனையில் பேசுபவர், "நாங்கள் டில்லியில் இருந்து பேசுகிறோம். நீங்கள் "நெட் ஒர்க்' சர்வீஸை அதிகளவில் பயன்படுத்தியுள்ளீர்கள்; ரேண்டம் அடிப்படையில், உங்களது மொபைல் நம்பர், பரிசுக்கு தேர்வாகியுள்ளது. ஆயிரம் பேரில் ஒருவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், எங்கள் நிறுவனம் உங்களுக்கு பரிசு வழங்குகிறது. உங்களது பெயர், முகவரி தெரிவியுங்கள்,' என கேட்கின்றனர்.தங்களை பற்றிய விவரங்களை வாடிக்கையாளர் தெரிவித்ததும், "உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள தபால் நிலையத்துக்கு பரிசு அனுப்புகிறோம். அதில், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கும். எங்கள் வாடிக்கையாளர் என்பதால் 2,500 மட்டுமே செலுத்தி, அதை பெற்றுக்கொள்ளலாம்,' என ஆசை காட்டுகின்றனர்.
நம்பிக்கையூடன் ஒரு வாரம் கழித்து தபால் அலுவலகம் செல்லும் வாடிக்கையாளர், கையொப்பமிட்டு பணம் செலுத்தி, டில்லியில் இருந்து வந்த பரிசு கவரை பெறுகிறார். அதில், ஒரு யந்திரம், தகடு மட்டுமே இருக்கிறது. தபால் துறை அலுவலர்களிடம் கேட்டால்,"எங்களுக்கு என்ன தெரியும்? உங்கள் பெயருக்கு பார்சல் வருகிறது; கையொப்பமிட்டு நீங்கள் பெறுகிறீர்கள். உள்ளே இருப்பது என்னவென்று எங்களுக்கு எதுவும் தெரியாது,' என்கின்றனர். இதனால், தபால்துறை - வாடிக்கையாளர்கள் இடையே அடிக்கடி தகராறு நடக்கிறது.
தபால் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கோடிக்கணக்கானோர் மொபைல் பயன்படுத்துகின்றனர். அவர்களில் யாருக்கும் வராத பரிசு, நமக்கு மட்டும் எப்படி வருகிறது? அப்படியே வந்தாலும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை எப்படி, 2,500 ரூபாய்க்கு தர முடியும் என்பதை, வாடிக்கையாளர்கள் சிந்திக்க வேண்டும். தவிர, எந்த பொருள் வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளாமல், பணம் செலுத்தி பெற்றுக்கொள்வது தவறு,' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.