Pages

Monday, November 3, 2014

இரவில் "டிவி'யை ஆனில் வைத்தால் மின் இழப்பு ; விழிப்பு வழங்கும் மின்வாரியம்


வீட்டில் இரவு முழுவதும் "டிவி' யை ஆனில் வைத்திருந்தால் நாள் ஒன்றுக்கு 10 வாட்ஸ் மின்சாரம் இழப்பாகும், என, மின்பயனீட்டாளர்களுக்கு மின்வாரியத்தினர் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.

காரைக்குடியில் பள்ளி மாணவர்களுக்கான மின் சிக்கனம், பாதுகாப்பு, மின் திருட்டு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மின்வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியன் பேசுகையில், மழை நேரம் நெருங்கியுள்ளதால், மாணவர்கள் மின்கம்பம் அறுந்து விழுந்தால், மின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவேண்டும். மழை நேரங்களில் மின்கம்பங்களுக்கு அருகே செல்லக்கூடாது. மின்சாரத்தை விதிகளை மீறி யாரேனும், கொக்கி போட்டு திருடினால் தெரிவிக்கலாம். மொபைல் சார்ஜர்களை இரவு முழுவதும் ஆனில் வைத்திருக்க கூடாது. அதேபோன்று இரவில் "டிவி'யை ரிமோட்டில் ஆப் செய்துவிட்டு தூங்கினால் நாள் ஒன்றிற்கு 10 வாட்ஸ் மின்சார இழப்பு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் 20 யூனிட் மின்சாரம் கவனக்குறைவால் இழப்பு ஏற்படுகிறது.
குறைந்த மின்சாரத்தில் அதிக ஒளி தரும் சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்த வேண்டும். ஒரு யூனிட் மின் சேமிப்பு, இரண்டு யூனிட் உற்பத்திக்கு சமம். அவ்வை அன்று போதித்தது பொது சிக்கனம், நமக்கு இன்று தேவை மின்சிக்கனம், என பேசினார். எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆனந்தாய், உதவி பொறியாளர் முத்துராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.