Pages

Sunday, August 24, 2014

கிராமமே நடத்தும் நவீன அரசு தொடக்கப்பள்ளி

உடைந்து போன ஓடுகள், பெயர்ந்து கிடக்கும் தரைகள், பிளந்து நிற்கும் சுவர்கள்..., இப்படித்தான் இன்று பெரும்பாலான அரசு பள்ளிகளை காண முடிகிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஏதாவது ஒரு அரசு பள்ளி மட்டுமே எல்லா வித வசதிகளையும் பெற்று இருக்கின்றது. இதனால் தான் என்னவோ, அரசு பள்ளி என்றாலே பெற்றோர் பலர் பயந்து நடுங்குகிறார்கள்.
ஆசிரியர்குரல்அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்களே, தங்களது குழந்தைகளை ஹைடெக் கல்வி என்ற பெயரில் தனியார் பள்ளியில் தான் சேர்த்து படிக்க வைக்கிறார்கள்.
அதுவும் அரசு தொடக்கப்பள்ளிகளின் நிலை மட்டுமல்ல, அங்கு ஆசிரியர்குரல்கற்பிக்கப்படும் கல்வி முறைகளும் கவலை அளிப்பதாகவே உள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் அப்படி அல்ல. நவீன உலகத்துக்கு ஏற்ப ஆங்கில அறிவை ஊட்டி, சிறு வயது முதலே ஒரு மாணவனை அவர்கள் தயார் படுத்துகிறார்கள்.

இந்த வரிசையில் நாகர்கோவில் அடுத்த பூச்சிவிளாகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியும் இடம் பெற்று இருக்கிறது. 1962ல் தொடங்கப்பட்ட இந்த தொடக்கப்பள்ளி இடையில் மாணவ, மாணவிகள் இல்லாமல் மூடப்படும் நிலையை எட்டியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள பள்ளி மூடப்பட்டு விடக்கூடாது என முடிவு செய்தனர். ஆசிரியர்குரல்இதற்காக ஊர் நிர்வாகிகள், பொதுமக்கள் கூடி ஆலோசனை நடத்தி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர குழு அமைத்து நடவடிக்கைகளிலும் இறங்கினர்.

இதன் விளைவாக பள்ளியில் யு.கே.ஜி தொடங்கப்பட்டது. தனியார் பள்ளிக்கு தான் வேன், ஆட்டோக்கள் வருமா?. அரசு பள்ளிக்கும் நாங்கள் வாகன ஏற்பாடு செய்கிறோம் என கூறி மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக சுமோ, ஆட்டோ அமர்த்தப்பட்டது. இதையடுத்து ராஜாக்கமங்கலம் வட்டாரம் முழுவதும் ரவுண்ட் அடித்து இந்த பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்தது. அதன் விளைவு படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது.

2013- 14ல் 65 என இருந்த இந்த பள்ளியின் மாணவர் எண்ணிக்கை, இப்போது 112 ஆக உயர்ந்துள்ளது. தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர்குரல்ஆசிரியர் என்று மட்டுமே இருந்தனர். அரசிடம் கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை வைத்தனர். அத்தோடு நின்று விடாமல் ஊர் பணத்தில் இருந்து சம்பளம் கொடுக்கும் வகையில் 3 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கும் கணிசமான சம்பளம் கொடுக்கப்பட்டது.

யு.கே.ஜி. முதலே இப்போது ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. இங்கு யு.கே.ஜி. சேர்க்கப்படும் குழந்தைகள் 5ம் வகுப்பு வரை கண்டிப்பாக இந்த பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் சேர்க்கப்படுகிறார்கள். இங்கு வரும் குழந்தைகள் தனியார் பள்ளிக்கு செல்வது போல் டை, ஷூ அணிந்து செல்கிறார்கள்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வில்சன்ராஜிடம் பேசிய போது கூறியதாவது :

இந்த பள்ளிக்கு தற்போது கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சிறந்த தொடக்க பள்ளி, அதிக புரவலர்கள் சேர்ப்பு உள்ளிட்டவற்றுக்காக இந்த பள்ளி விருதுகளை வென்று இருக்கிறது. எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை நடுநிலைப்பள்ளியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அரசு பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தையும், நன்றாக படிக்கிறது.

நல்ல முறையில் பள்ளிக்கு செல்கிறது என்ற நம்பிக்கையை பெற்றோர் மனதில் ஏற்படுத்தி இருக்கிறோம். ஊர் நிர்வாகிகள், பொதுமக்களின் முயற்சியால் தான் இது நிகழ்ந்து இருக்கிறது. நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். கிராமப் புறங்கள் பள்ளிகள் மூலம் தான் சிறந்து விளங்க முடியும் என்பதை இந்த மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள் என்றார்.

உண்மையிலேயே தனியார் பள்ளிக்கு சமமாகவே இருக்கிறது பூச்சி விளாகம் அரசு தொடக்கப்பள்ளி.

1 comment:

  1. Very nice message follow to all government school pls . Pls hard work panuga government staffs

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.