தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் 2,582 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மத்திய அரசு அறிமுகப்படுத்திய கட்டாய கல்வி சட்டம் 2009ன்படி 23.08.2010க்கு பிறகு இடைந¤லை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 12 மற்றும் அக்.14ம் தேதியில் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 3 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இதனால் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஆக.17ம் தேதி அந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு பணி முடிந்துள் ளது. எனினும் கோர்ட்டில் வழக்குகள், வெயிட்டேஜ் ஆகியவை காரணமாக ஆசிரியர் நியமனம் தாமதமாகி வருகிறது. இதனிடையில், தொடக்க கல்வித் துறையில் 2,584 இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதில் பின்னடைவு காலி பணியிடங்கள் 845. தற்போதைய பணியிடங்கள் 830. சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் பின்னடைவு காலியிடங்கள் & 102. சிறுபான்மை மொழி தற்போதைய காலியிடங்கள் & 72. பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை பள்ளிகளின் காலியிடங்கள் & 64. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் காலியிடங்கள் & 669 என மொத்தம் 2,582 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.